டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா?

உங்கள் வீட்டிற்குள்ளும் ஒரு அபிராமி இருக்கலாம் சார்!

தமிழகத்தில் வெல்ல மோடியின் முகம் கைகொடுக்குமா?

அழகிரி கருணாநிதியின் விருப்பத்திற்குரிய மகனா?

#மேற்குத்_தொடர்ச்சி_மலை -அருண் நெடுஞ்செழியன் பார்வை!

தென் தமிழகத்தின் தென்காசியில் நடைபெறும் கூட்டம் ஒன்றில் பங்கேற்க தூத்துக்குடி விமானத்தில் பயணித்த பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசையை நோக்கி தூத்துக்குடியைச் சேர்ந்த சோஃபியா என்ற பெண் “பாசிச பாஜக ஒழிக” என்று கோஷமிட்டதால். தமிழசையின் புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக ஆட்சி செய்கிறோம் என்று சொல்லி பதவிக்கு வந்த பின்னர் மக்களுக்கு எதிரான ஆட்சியை செய்கிறவர்களுக்கு மக்கள் ஜனநாயக வழிகளில் தங்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதற்குரிய வழிகளை ஜனநாயகம் வழங்குகிறது. இந்தியாவில் அதற்கு முந்தைய 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் அதிருப்தி பாஜகவை தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக ஆட்சியில் அமர்த்தியது. குஜராத்தில் முதல்வராக இருந்த மோடி பாஜகவை மிக பிரமாண்டமாக வெற்றி பெற வைத்து பிரதமர் ஆனார். ஆனால், காங்கிரஸ் ஆட்சியின் கசப்பு பாஜக மீது பல எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கியது. ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டே ஆண்டுகளில் மோடியின் வீழ்ச்சி துவங்கி விட்டது.

நூற்றுக்கணக்கான மசோதாக்கள், சட்டங்கள் மக்களின் உரிமைகளைப் பறித்தன. எதை எல்லாம் மோடி காங்கிரஸ் ஆட்சியில் எதிர்த்தாரோ அதை எல்லாம் கொண்டு வந்தார். உதாரணத்திற்கு ஆதார் அட்டை. இன்னும் சொல்லப் போனால் காங்கிரஸ் கட்சி தயங்கி தயங்கி நடைமுறைப்படுத்த தயங்கிய மக்கள் உரிமை பறிப்புச் சட்டங்கள் அனைத்தும் வேக வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டன.அப்போதே மக்கள் மோடியின் மீது அதிருப்தி அடையத் துவங்கி விட்டார்கள்.

2016- ல் ரூபாய் நோட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பலன் என்ன என்பது உங்களுக்கு தெரியும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் இயக்குநர் ரகுராம் ராஜனின் கூற்றை நீங்கள் கவனித்திருக்கக் கூடும். இந்திய வரலாற்றில் படு தோல்வியடைந்த ஒரு கருப்பு நடவடிக்கைதான் டீமானிட்டைசேஷன். அது வெறுமனே தோல்வியடைய வில்லை நாடு முழுக்க 150 உயிர்களை காவு வாங்கி முடிவுக்கு வந்தது.

அதனுடைய விபரீதமான பின் விளைவுகளில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளமுடியவில்லை. மீள்வதற்கு ஜி.எஸ்.டி அமல் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மீதும் இந்தியாவின் இதயமான சிறு வணிகத்தின் மீதும் மிருகத்தனமாக தாக்குதலை ஜி.எஸ்.டி நடத்தியது. தமிழகத்தின் திருப்பூர் பின்னலாடை, சிவகாசி பட்டாசு என ஒட்டு மொத்த தொழில்களும் நசிந்து காணப்படுகிறது.

நிற்க, இது தொழில்துறை பின்னடைவு. மதவெறி, மாட்டிறைச்சி அரசியல் என எப்போதும் ஏதேனும் ஒரு நேரம் ஒரு மக்கள் கூட்டத்தின் மீது உங்கள் கட்சியினர் வெறுப்பை உமிழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். தலைமை இல்லாத அதிமுக அணிகளாக ஓபிஎஸ்- இபிஎஸ் முகமூடிகளை வைத்து தமிழகத்தை உங்கள் டெல்லி தலைமை ஆட்சி செய்கிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட அனைத்திலும் அதிமுக நீங்கள் கேட்காமலெயே வாக்களிக்கிறது. ஆனாலும், ஒன்றை கவனித்தீர்களா தமிழிசை யாராவது அதிமுகவினரிடம் “பாஜகவோடு கூட்டணியா?” என்று கேட்டால்..

பதறிப்போய் இல்லை என்கிறார்கள் அதிமுகவினர்..
திமுக கலைஞர் நினைவேந்தலுக்கு அமித்ஷாவை அழைத்தது பாஜகவோடு கூட்டணி குறியீடு என்று பேசப்பட்டது. ஆனால் திமுக தலைவரான ஸ்டாலின் தன் முதல் உரையிலேயே உங்களோடு இணைய மாட்டோம் என பளிச்சென்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
ஆக மொத்தம் எந்தக் கட்சியும் தமிழகத்தில் உங்களோடு கூட்டணி சேர தயங்குகிறது. எஞ்சியிருபப்து ரெய்ட் வருமோ, கைது செய்வார்களோ என்ற அச்சம்தான் பாஜக குறித்து பலரையும் பேச விடாமல் தடுக்கிறது.

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்க உங்கள் கூட்டணியில் இருந்தவர்களே இப்போது ஓடுகிறார்கள். சிவசேனா, சந்திரபாயு நாடு, என ஒவ்வொருவராக கழண்டு கொண்டிருக்கிறார்கள்
ஏன் தமிழிசை மேடம் நல்லாட்சி கொடுக்கும் மோடியிடம் இருந்து விட்டால் போதும் என கூட்டணி கட்சிகள் ஏன் ஓடுகின்றன?

நீட்டில் தங்கை அனிதாவின் உயிரை பறிகொடுத்த ஒவ்வொருவருக்கும் தெரியும் அதில் பாஜகவின் ஐடியாலஜிக்கல் தந்திரம் எது என்று?

மொத்தத்தில் உங்கள் மீதல்ல உங்கள் கட்சி மீது மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது. அந்த வெறுப்பை வெளிப்படுத்தும் ஒரு தருணத்திற்காக ஒவ்வொரு குடிமகனும் காத்திருக்கிறான். ஆனால், அந்த எதிர்ப்பை ஒரு கோஷத்தின் மூலமோ, சத்தமான குரலின் மூலமோ வெளிப்படுத்தும் போது உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது?

அந்த குரலை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால்
நாளை நீங்கள் எங்கு சென்றாலும் இந்த குரல்கள் கேட்கும். அந்த குரல் விமானத்தில்தான் கேட்கும் என்றில்லை நீங்கள் ஒரு சைக்கிளில் சென்றால் கூட அந்த குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும் அது பாதிக்கப்பட்ட குரல் அப்படித்தான் ஒலிக்கும்!

#Tamilisai_Soundararajan #DrTamilisaiBJP #தமிழிசை_சௌந்தரராஜன் #தமிழக_பாஜக #மோடி_அரசின்_வீழ்ச்சி#yougogirlsofia#isupportsofia

1 Comment

  1. விமர்சனத்தை ஏற்றுக்கொல்ல தைரியம்இள்ளாத கோழைகள் செய்கிற ஈனசெயல்தான் கைதுநடவடிக்கை.

Leave a Reply

Your email address will not be published.


*