தனிப்பட்ட தகவல்களில் ஊடுறுவும் விகடன் செயலிகள்!

தப்ப விட்டது சிபிஐ-உத்தரவிட்டது மோடி!

எழுவர் விடுதலை : ஜனாதிபதி பெயரில் போலி அறிவிப்பு வெளியிட்ட உள்துறை அமைச்சகம்!

திமுகவை குறிவைக்கும் ஊடகங்கள்?

மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகிறார் அற்புதம்மாள்!

”20 நிமிடங்கள் வரை மல்லையா அருண்ஜெட்லியுடன் பேசினார்”- காங் குற்றச்சாட்டு

வாசன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஊடக நிறுவனத்தில் இருந்து ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களும், ஆன்லைன் , யூ டியூப் ஊடகங்களும் தொழிற்பட்டு வருகிறது. இது போல செய்திகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், தங்கள் ஊடக படைப்புகளை வாசகர்களிடம் சேர்க்கவும் செயலிகளையும் பயன்படுத்துகிறது விகடன். சந்தா கட்டி இந்த செயலிகளை தரவிரக்கம் செய்தால். அவைகள் நம் கைத்தொலைபேசிகளில் இருக்கும் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தனித் தகவல்களை எடுத்துக் கொள்ளும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது என குற்றம் சுமத்துகிறார்.  இது தொடர்பாக லண்டனில் வசிக்கும் முரளி ஷண்முகவேலன் எழுதியிருக்கும் பதிவும் அதையொட்டி முகநூல் தளத்தில் இடப்பட்டிருக்கும் பதிவும் இது!

விகடன் விளக்குமா?

விகடன் குழுமத்தின் செயலியை பயன்படுத்தும் பயனாளர்களின் செல்பேசி அல்லது கைக்கணினிகளில் இருக்கும் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்களை பார்க்க அனுமதித்தால் மட்டுமே கட்டுரைகளையும் செய்திகளையும் படிக்க முடிவதாகவும் அனுமதிக்க மறுத்தால் விகடன் செயலியில் செய்திகள் கட்டுரைகளை படிக்க முடியவில்லை என்றும் இவர் புகார் கூறுகிறார். ஏற்கனவே சந்தா செலுத்திவிட்ட நிலையில் இந்த பிரச்சனையால் இவரால் தன் சந்தாவை பயன்படுத்த முடியாத நிலை. விகடன் நிறுவனத்திடம் புகார் அளித்தும் உரிய பதில் இல்லை என்கிறார்.

விகடன் இந்த பிரச்சனையை தீர்க்குமா? அல்லது விகடன் சந்தாதாரர்கள் யாராவது இதற்கான தீர்வை சொல்வார்களா??

#வாசன்_பப்ளிகேஷன்ஸ் #Vikatan #Ananda_Vikatan #Vasan_Puplications

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*