தப்ப விட்டது சிபிஐ-உத்தரவிட்டது மோடி!

“அமைதிக்கான பெண்களின் பயணம்!

எழுவர் விடுதலை : ஜனாதிபதி பெயரில் போலி அறிவிப்பு வெளியிட்ட உள்துறை அமைச்சகம்!

திமுகவை குறிவைக்கும் ஊடகங்கள்?

மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகிறார் அற்புதம்மாள்!

”20 நிமிடங்கள் வரை மல்லையா அருண்ஜெட்லியுடன் பேசினார்”- காங் குற்றச்சாட்டு

9000 கோடி ருபாய் அளவுக்கு இந்திய வங்கிகளில் மோசடி செய்து விட்டு லண்டனுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையா “நான் இந்தியாவில் இருந்து வருவதற்கு முன்பு அருண் ஜெட்லியை சந்தித்தேன்” என்று கூறியது பெரும் சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில், அருண் ஜெட்லி அதை மறுத்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி புன்யா “மல்லையாவும் ஜெட்லியும் சுமார் இருபது நிமிடங்கள் வரை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பேசிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன்” என்றார்.
இந்நிலையில், இது தொடர்பாக சிபிஐ உயர் மட்ட விசாரணைக்குழுவில் இருந்து கசிந்துள்ள தகவல்கள் மேலும் அதிர்ச்சியளிக்கின்றது. விஜய் மல்லையா விசாரணை வளையத்தினுள் கொண்டு வரப்பட்ட காலத்தில் சிபிஐ வெளியிட்ட சுற்றறிக்கையில் விஜய்மல்லையா தொடர்பாக அனுப்பிய சுற்றறிக்கையில் அவரை கைது செய்ய வேண்டும் என்பதற்கு பதிலாக கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்றிருந்தது. இது தொடர்பாக தவறிழைத்து விட்டோம் என்று சிபிஐ தகவல் வெளியிட்டதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் கருத்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி “லுக் அவுட் சுற்றறிக்கையில் கைது என்பதற்கு பதிலாக தகவல் தெரிவியுங்கள் என திருத்தம் செய்து மல்லையாவை சிபிஐ நேரத்தியாக தப்பவிட்டுள்ளது. இதை சிபிஐ நேரடியாக பிரதமரிடமே தெரிவித்துள்ளது.9000 கோடி ரூபாய் அளவில் உள்ள சர்ச்சைக்குரிய இந்த வழக்கில் பிரதமர் ஒப்புதல் இல்லாமல் சிபிஐ லுக் அவுட் நோட்டீசில் மாற்றம் செய்தது வியப்பளிக்கிறது”என்று டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.2015 ஜூலை 29-ஆம் தேதியே சிபிஐ வழக்குப் பதிந்தும் மல்லையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் மோடி அரசு தோல்வியைத் தழுவி விட்டது” என்கிறார் ராகுல்காந்தி.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*