தமிழகத்தில் வெல்ல மோடியின் முகம் கைகொடுக்குமா?

தமிழகத்தில்: கதற கதற ஆபரேஷன் செய்த துப்புரவு ஊழியர்!Video

‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படம் பற்றிய பகிர்வுத் தொகுப்பு

2019-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வட இந்தியமாநிலங்களில் எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றியை பெற முடியாத என்பதை புரிந்து கொண்டுள்ள பாஜக தென்னிந்திய மாநிலங்களை குறிவைக்கிறது. ஜெயலலிதா மரணத்தின் பின்னர் அதிமுகவின் ஒரு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து ஆட்சி செய்து வரும் பாஜக இச்சூழலை பயன்படுத்தி தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளையும் ஒன்று விடாமல் கைப்பற்ற நினைக்கிறது. ஆனால், அதற்கு அவர்கள் பயன்படுத்தப்போகும் முகம் மோடி.

ஜெயலலிதா மரணத்தின் பின்னர் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாக முதன் முதலாக கூறியது பாஜக, தமிழகத்தில் செல்வாக்கில்லாத பாஜக அதிமுகவை கைப்பற்றி   அக்கட்சியோடு கூட்டணி வைத்து அதிக தொகுதிகளில் வெல்லலாம் என்று முதலில் எண்ணியது. ஜெயலலிதா மரணத்தின் பின்னர் பாஜகவோடு அதிமுக இணைந்து பயணிக்கிறது. ஜனாதிபதி தேர்தல், மாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல், நம்பிக்கை வாக்கெடுப்பு என முக்கிய நிகழ்வுகளில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்து பாஜக  கூட்டணியில் தான் உள்ளோம் என்பதை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறது.

ஆனால்,  ஒபிஎஸ்- இபிஎஸ் என இருவரையும் வைத்து பாஜக வெல்லுமா என்றால் ஆர்.கே. நகர் தேர்தலே அதற்கு விடையளித்து விட்டது.மகக்ளுடைய வெறுப்புக்கு ஆளாகியிருக்கும் இவர்களை மட்டுமே நம்ப முடியாது என்பதால், செல்வாக்குள்ளவராக வரும் தினகரனை சமாதானம் செய்யும் முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

கருணாநிதி மறைவுக்குப் பின்னர் ஸ்டாலின் பாஜக பக்கம் வருவார் என்ற நப்பாசை பாஜகவுக்கு முதலில் இருந்தது. ஆனால் திமுக தலைவரான ஸ்டாலின் தன் முதல் உரையிலேயே காட்டமாக பாஜகவுக்கு பதிலளித்து விட்டதால் அதுவும் இனி சாத்தியமில்லை என்பதால். ரஜினி +அதிமுக+தினகரன்+அழகிரி இவர்களுடன் பாஜக கூட்டணி என்ற  திட்டம்தான் பாஜக தரப்பில் பைனலாகிறது.

ஆனால், இந்த கூட்டணி மட்டும் வென்று விடுமா என்ன? 40 தொகுதிகளையும் கைப்பற்ற நினைக்கும் பாஜகவால் ஒரு தொகுதியில் கூட வெல்லும் சூழல் தமிழகத்தில் இல்லை. இந்தியா முழுக்க மோடி அலை வீசிக் கொண்டிருந்ததாக பேசப்பட்ட போது தமிழகம் வந்த பாஜக பிரதமர் மோடிக்கு எதிராக  #GoBackmodi என்ற ஹேஷ்டேக்கை போட்டு உலக அளவில் டிரெண்டிங் ஆக்கியவர்கள் தமிழர்கள்.

நீர் தேர்வு, ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட், ஓக்கி மரணங்கள், என தமிழகம் மோடி அரசால் வஞ்சிக்கப்படுகிறது என்ற எண்ணம் தமிழகத்தின் அத்தனை குடிமக்களிடமும் பரவி இருக்கிறது. இந்த எண்ணத்தை அத்தனை எளிதில் மாற்றி விட முடியாது.

மோடி என்னும் முகம் வட இந்தியாவில் கூட இப்பொது எடுபடாமல் போய் விட்டது. அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கும் பாஜக அறிமுகம் இல்லாத தமிழகத்தில் மோடியின் முகத்தை புதிதாக புகுத்தி வென்று விடலாம் என எண்ணுவது  பகல் கனவுதான்.

காரணம் அதிமுக பாஜகவோடு கூட்டணி வைத்தால் அது சிறுபான்மை மக்களின் வாக்குபலத்தை இழக்கும், கட்சிக்குள் பிளவுகள் நடக்கும் என்னும் நிலையில் மறைமுக கூட்டணியையே வைக்க முடியாது.

அதிமுக மட்டுமல்ல பாஜகவுடன் வெளிப்படையான கூட்டணிக்கு  ஏதேனும் ஒரு கட்சி தயாராக இருக்கிறதா என்பதே முதல் கேள்வி!

மெர்சலை மிஞ்சும் விஜய்யின் சர்கார்!

கருணாநிதியின் தியாகம் அளப்பரியது :நிதின் கட்கரி புகழாரம்!

ஸ்மாட் நகரம் அமைச்சர் வேலுமணியின் பினாமிக்கு டெண்டர்!

தமிழ்த்தேசிய அரசியல் உக்கிரமாக காத்துக் கிடக்கிறது:ராஜ்தேவ்

#2019_Elaction #நாடாளுமன்றதேர்தல் #Modi #Gobackmodi #Tamilnadu_Bjp

 

 

 

 

 

வி தொக்கி நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*