தமிழிசைக்கு ஆதரவா :ஓவியா பதில்!

தோழர் ஓவியா தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்!

தெறிக்க விட்ட ஷோபியா: பாஜக பணிந்தது எப்படி?

சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்!

சோபியாவுக்கு பெருகும் ஆதரவு :டிரெண்டிங் ஆகும் பாஜக ஒழிக

ஸ்டெர்லைட் பற்றி மார்ச் மாதம் சோஃபியா எழுதிய கட்டுரை!

முதலில் நான் வைத்த அடிப்படையான ஒரு கேள்வி அநாதையாகக் கிடக்கிறது. தங்கள் கட்சித் தலைவருக்கு இப்படி நடந்தால் பிற கட்சிக் காரர்கள் என்ன செய்வார்கள் அல்லது செய்கிறார்கள் இந்த நாட்டில் என்று கேட்டேன், இந்த கேள்விக்கு பதில் எல்லோருக்கும தெரியும். ஆனால் யாரும் வெளிப்படையாக சொல்ல மறுக்கிறார்கள்.

பெரும்பாலும் கேட்கப்பட்ட கேள்வி இது எப்படி பெண்கள் பிரச்சனையாகும் என்பது. நிச்சயமாக இது பெண்கள் பிரச்சனைதான். பெரும்பாலான ஆண் தலைவர்களிடம் இப்படி யாரும் நடந்து கொள்ள முடியாது, அது ஒரு பெண் தலைவருக்கு நடந்திருக்கும் போது அதை ஏன் பெண்கள் பிரச்சனையாகப் பார்க்கிறீர்கள் என்று கேட்பதற்கு என்ன பதில் சொல்வது. விமான நிலையத்தில் மட்டுமல்ல எங்கு வேண்டுமானாலும் நீங்கள் முழக்கமிடலாம். ஆனால் ஒரு தனி நபரை குறி வைத்து அவரை நிலை தடுமாறச் செய்வது குற்றம். அது ஒரு முழக்கமாக இருக்கலாம். பார்வையாக இருக்கலாம். உரசலாக இருக்கலாம். அந்த செயல் எது என்பதல்ல பிரச்சனை. நோக்கம் எது என்பதுதான் இங்கு முக்கியம். பெண்களில் பலர் பல உயரிய பதவிகளுக்கு வந்த பின்னரும் அதிகாரமிக்க நிலைகளிலிருக்கும் போது கூட கெட்டி தட்டிப் போன அடிமை உளவியலின் விளைவாய் பொது இடங்களில் எளிதாக பதட்டப்படுத்தப் படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். பொது இட நடவடிக்கைகள் பற்றிய சிந்தனை இன்னும் வளர்த்தெடுக்கப் பட வேண்டிய தேவை இருக்கிறது. இந்த நிலையில் பொது இடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பின் தேவை குறித்து நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.எனக்கு வியப்பே இதையெல்லாம் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிய பலர் இது பெண்கள் பிரச்சனையா என்று கேட்பதுதான்.

அவர் தமிழிசையை ஒழிக என்று சொல்லவில்லை என்று பல பெரியவர்களே பதில் சொல்கிறார்கள். ஆகா… இப்படி கூட பேசுவீர்களா…. பிரச்சனை பண்ணியதே அவர்களிடம்தானே.. பிறகு அவர்களை அது பாதிக்கக் கூடாது என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? சிலர் சொல்கிறார்கள்.. அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு அவர் தட்டிக் கொடுத்திருக்க வேண்டும் என்று. இது ஒரு உன்னதமான நடவடிக்கைதான். ஆனால் ஒருவர் தான் உன்னதமாக இருக்க முயலலாம். அந்த உன்னதத்தை இன்னொருவர் மீது திணிக்க முடியாது. ஆனால் தியாகத்தையே பெண்ணின் குணமாக திணித்து வைத்திருக்கும் இந்த சமுதாயத்தின் தொடர்ச்சியாகதான் உன்னதத்தை மேலும் திணிக்க விரும்புகிறீர்கள். குடும்பத்தின் கடைசிச் சோ’று தியாகி அவள்..பொது வெளியில் ஞானியாக உன்னதமாக மட்டும்தானிருக்க வேண்டும்.

சோபியா பெண்ணில்லையா என்று கேட்கிறார்கள். இங்கு பிரச்சனையை தொடக்கியவராக அவர் இருக்கிறார். அவரை ஆபாசமாக திட்டியதை நீஙகள் கண்டிக்கவில்லை என்பது முக்கியமான குற்றச்சாட்டு. நேற்றைய தொலைக்காட்சி விவாதத்தில் அதனை நான் தெளிவாகக் குறிப்பிட விடுபட்டது குறித்து வருந்துகிறேன். ஆனால் பெண்ணை பொதுவெளியில் தாக்குவது என்று ஆண்கள் முடிவு செய்து விட்டால் கெட்ட வார்த்தை என்பது அவர்கள் பயன்படுத்தும் முதல் ஆயுதம். நேற்று என் தளத்தில் வந்து பின்னுட்டமிருக்கும் உங்களில் ஒருவர் என்னை சரக்கடித்து விட்டு வந்தியா என்று கேட்டிருக்கிறார். இதற்கு முன்பு பல பதிவுகளை நான் அருவருப்பு காரணமாக நீக்கியிருக்கிறேன். ஒருவேளை இதற்கான பின்னுட்டத்திலும் சிலர் நல்ல மொழியோடு வரலாம். எதிர்ப்ர்த்தே இருக்கிறேன். எங்கள் பதிவுகளின் பின்னுட்டங்களில் அப்படி பதிவிடும் போது நீங்கள் மௌனமாகதானே கடந்து செல்கிறீர்கள்? தெரிந்து கொள்ளுங்கள் இதுதான் எங்கள் பொது வாழ்க்கை. எங்களிடம் வந்து பெண்ணை ஆபாசமாக பேசினால் தப்பில்லையா என்று கேட்டால் நாங்கள் எனன சொல்ல?

சோபியா கைது அவர் சிறைப்படுத்தப் பட்டது… தொடர் நடவடிக்கைகள் இவற்றில் இந்த அரசாங்கத்தைக் கண்டித்த எனது கருத்து முதன்மைப் படவில்லை காரணம் தமிழிசை பக்கம் நீங்கள் யாருமே பேசாதபோது எனது குரலை அவருக்கு அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும் என்று நான் நினைத்ததுதான். இறுதிக் கருத்து என்ற சுற்று வந்திருந்தால் தொகுத்து சொல்லும் போது அதைக் குறிப்பிட்டிருக்கலாம். இன்னொரு விசயம் தமிழிசைக்காக நான் வாதாடியது தமிழிசையை மனதில் வைத்தல்ல. தமிழிசைக்கே இதுதான் நிலை எனறால் …. என்கிற மயக்கம் பொது வெளிக்கு வர நினைக்கும் பெண்களுக்கு வரக் கூடாது என்பதற்காகதான். இப்போது புரிகிறதா இங்கு இவர்கள் பேசும் பெண்ணியம் எவ்வளவு பாசாங்கானது என்று.. இவர்கள் பேசும எதுவும் தமிழிசைக்கு பொருந்தாதாம். ஏனெனில் அவர் எதிர்க் கட்சிக் காரர். அற்புதம். வழக்கம் போல் இதை வழிமொழிய பெண்கள் கூட்டம்.
இதில் திமுக காரர்கள் இதைத் தங்கள் சொந்தப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டனர். காரணம் திமுக தலைவர் சோபியா விடுதலையை கோரியிருந்தது. உண்மையில் எதிர்க்கட்சித் தலைவராக அந்த கோரிக்கை நியாயமான சரியான கோரிக்கை. அந்த தட்சிக்காரர்கள் அந்த கோரிக்கையை இந்த முழுப் பிரச்சனைக்கும் பொருத்தி இதில் மாற்றுக் கருத்து கூறுவோரை எதிரியாக பார்க்க துவங்கியது வருத்தத்துக்குரியது. சுருக்கமாக தமிழிசையை ஆதரிப்பதா என்பதே கேள்வியாகிப் போனது. ஆனால் எனக்கு அதல்ல கேள்வி.

அண்மைக் காலமாக மிக வெளிப்டையாக தெரியும் தவறுகளைக் கூட இந்த சமுதாயத்தில் தவறு என்று சொல்ல முடியவில்லை என்பதை வேதனையுடன் உணர்கிறேன். ஒற்றைக் குரலாக ஒலிததாலும் பரவாயில்லை விவேகமுள்ள நாணயமான தலைமுறை ஒன்று வரும். அவர்களுக்காக எழுத்துக்களை விட்டுச் செல்வோம் என்று கருதுகிறேன். எழுத்துக்கள் கருத்துக்கள் இன்றைய பார்வையாளர்களுக்காக மட்டும் சொல்லப் படுவதில்லை. முறை பெரிதல்ல முடிவே பெரிது என்பது சாணக்கியம். முறையும் முடிவும் நேர்மையாக இருக்க வேண்டுமி என்பது தமிழர் பண்பாடு. போருக்கு ஆயத்தமாயிருந்தால் கூட ஆயுதமில்லாதவனுடன் போர் புரியாதே என்று சொன்ன முன்னோர்களின் வழியில் மயிரைக் கட்டி மலையை இழுக்கிறேன் வந்தால் மலை போனால் மயிரு என்று ஒற்றை மனிதராய் பயணிக்கக் கற்றுக் கொடுத்த பெரியாரின் வழியில் இன்னும் தொடர்ந்து இயங்குவேன்.

#Tamilisai_Soundararajan #DrTamilisaiBJP #தமிழிசை_சௌந்தரராஜன் #தமிழக_பாஜக #மோடி_அரசின்_வீழ்ச்சி#yougogirlsofia#isupportsofia #JusticeForSofia #பாசிசபாஜக_ஆட்சிஒழிக #Ovia Rajamoni

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*