தமிழிசை ஆட்களால் நொறுக்கப்பட்ட கதிர் இவர்தான்!

தனிப்படை அமைப்பு? -வேடசந்தூரில் பேசிக் கொண்டிருக்கிறார் எச்.ராஜா!

மேலே விநாயகர் :கீழே மிக்ஸ்சிங் சைடிஸ் பிரியாணி-Video!

சைதாப்பேட்டையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசும் போது  பெட்ரோல் விலை தொடர்பாக கேள்வி எழுப்பிய ஆட்டோ டிரைவரை பாஜகவினர் நையப்புடைத்தார்கள்.

சைதாப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற தமிழிசை பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது. அவருக்குப் பின்பக்கத்தில் வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்  “பெட்ரோல் விலை இப்படி உயர்ந்து கொண்டே போகிறதே?” என்று கேள்வி எழுப்ப. மழுப்பலாக தமிழிசை சிரித்துக் கொண்டிருக்க பின்னால் நின்ற கட்சி நிர்வாகிகள் அவரை வயிற்றிலும், முகத்திலும் குத்தி  கொஞ்சம் தள்ளி இழுத்துச் சென்று பின்னர் கும்பலாக சூழ்ந்து நின்று நையப்புடைத்தார்கள்.

அப்படி கேள்வி எழுப்பிய ஆட்டோ டிரைவர் பெயர் கதிர். அன்றாடம் காய்ச்சியான கதிர் ஆட்டோ ஓட்டித்தான் தன் குடும்பத்தை நடத்துகிறார். நாளொன்றுக்கு வீட்டுச் செலவுக்கு 500 ரூபாய் தேவைப்படுகிறது. நாளுக்கு நாள் கூடிச் செல்லும் பெட்ரோல் விலை உயர்வால் 300 ரூபாய்தான் வருமானம் வருகிறது. இதனால் தமிழிசையிடம் கேட்டேன். ஆனால் வயதானவன் என்று கூட பார்க்காமல் என்னை அடித்து உதைத்து விட்டார்கள் என்று வருத்தம் தெரிவித்தார் கதிர்.

இந்த தாக்குதல் பற்றி எதுவும் தெரியாதது போல புன்முறுவலுடன் கடந்து சென்றார் தமிழிசை. அங்கு நின்றிருந்த பாஜக நிர்வாகிகள் அந்த ஆட்டோ டிரைவர் குடித்து விட்டு பிரச்சனை பண்ணினார் என்று கதையை முடித்துக் கொண்டார்கள்.

தூத்துக்குடி சென்ற விமானத்தில் சோஃபியா என்ற மாணவி பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்டதால் கைது செய்யப்பட்டார். தமிழிசையின் புகாரின் பெயரில் மாணவி கைது செய்யப்பட்டது கடும் சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில் பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக கேள்வி எழுப்பிய தமிழிசை  ஆட்களாலேயே ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

#ஐகோர்ட்டாவது மயிராவது – எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறது தமிழக அரசு

பெரியார் சிலையை அவமதித்தவருக்கு தர்ம அடி!

எச்.ராஜாவை மீது நடவடிக்கையாவது மயிராவது?

“ஹைக்கோர்ட்டாவது மயிராவது” -போலீசை விளாசிய எச்.ராஜா -Video!

விநாயகர் ஊர்வலம்:சிறுவர்களுக்கு கல்வீச கற்றுக்கொடுக்கும் மத வெறியர்கள்Vido

#Tamilnadu_BJP #DR_Tamilisai #BJP_Caders_Attack_auto_Driver

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*