திமுகவை குறிவைக்கும் ஊடகங்கள்?

மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகிறார் அற்புதம்மாள்!

”20 நிமிடங்கள் வரை மல்லையா அருண்ஜெட்லியுடன் பேசினார்”- காங் குற்றச்சாட்டு

சாரிடான் உள்ளிட்ட மருந்துகளுக்கு தடை!

கேரளத்தில் மழைக்குப் பிந்தைய வறட்சிக்கு வாய்ப்பு!

இந்தியாவின் பெரும்பலான ஊடகங்கள் பாஜகவால் கட்டுப்படுத்தப்படுவது அனைவரும் அறிந்த செய்திதான். தமிழகத்தில் உள்ள தொலைக்காட்சி, அச்சு ஊடகங்களும் பாஜகவின் பிரச்சார பீரங்கிகள் போன்றுதான் செயல்பட்டு வருகிறது. அவைகளுள் முதன்மையானது கல்வி வள்ளலுக்குச் சொந்தமான ஒரு தனியார் தொலைக்காட்சி.நாட்டின் நடக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் பாஜகவில் இருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் இருவரை விவாதத்திற்கு அழைக்கும் அந்த தொலைக்காட்சி. திமுகவினர் எவரையும் அழைக்காமலேயே திமுக பற்றிய அதன் உட்கட்சி விவகாரங்களை விவாதமாக்கி வருகிறது. இந்த தொலைக்காட்சி மறந்தும் மோடி அரசின் வீழ்ச்சி பற்றியோ அல்லது அதன் மீதான விமர்சனங்கள் பற்றியோ வாய் திறப்பதில்லை.
இந்நிலையில் தான் , பெரும்பலூர் அழகு நிலையத்திற்குள் புகுந்த ஒரு நபர் ஒரு பெண்ணை தாக்கும் வீடியோவை வெளியிட்டு திமுக பிரமுகர் பெண்ணை தாக்கும் விடியோ என்று செய்தி வெளியிட்டது. ஒரு அப்துல்லாவுக்கும் அமாவாசைக்கும் நடக்கும் தனிப்பட்ட பிரச்சனையை இந்து முஸ்லீம் பிரச்சனை போன்று சித்தரிப்பதுதான் இது. அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்களுமே இது போன்ற ரவுடித்தனங்களில் ஈடுபட்டாலும் அவர்களை அதிமுக பிரமுகர்கள் என்று குறிப்பிடாமல் தனிப்பட்ட பிரச்சனையாக குறிப்பிடும் இம்மாதிரி ஊடகங்கள் திமுக என்று வரும் போது திமுக பிரமுகர் என்று திமுகவுக்கு இழுக்கை ஏற்படுத்தும் உள்நோக்கத்தோடு செயல்படுகிறது.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் திமுகவுக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்த தமிழகம் முழுக்க ஒரு கட்சியினரும் தொலைகாட்சி ஊடகங்களும் கூட்டணி போட்டு இது போன்ற பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

#DMK #Perampalur_attack

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*