திருமுருகன் உயிருக்கு ஆபத்து?

‘பரியேறும் பெருமாள் ‘ குறைவான காட்சிகள்தான்-மக்களிடம் பெருகும் ஆதரவு!

பரியேறும் பெருமாள்’ கூட்டு மனசாட்சி மீது வீசப்பட்ட முதல் கல்!

தனிமைச்சிறையில் திருமுருகன் :பண்ருட்டி வேல்முருகன் கண்டனம்!

மெகுல் சோக்‌ஷி இந்தியா கொண்டு வரப்படுவாரா?

மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. உடல் நலம் குன்றியுள்ள அவருக்கு முறையான மருத்துவ பரிசோதனைகளோ, சிகிச்சைகளோ வழங்காமல் பெயரளவுக்கு சில சிகிச்சைகளைக் கொடுத்து அவரது உடல் நிலையை சிதைக்கும் நிலையை உருவாக்குகிறதோ என்ற சந்தேகம் பல தரப்பிலும் எழுந்துள்ளது.
ஒன்றரை மாதங்களுக்கு முன்னால் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி மீது பல்வேறு வழக்குகள் புனையப்பட்டன. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் கடந்த 23-ஆம் தேதி மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக தெரிவித்தனர். ஆனால், அவருக்கு முறையான சிகிச்சையளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் அவர் மயங்கி விழுந்துள்ளதால் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடல் பரிசோதனையும், சிகிச்சையும் வேண்டும் என்று திருமுருகன் காந்தி கோரிக்கை வைத்த நிலையில், மயிலாடுதுறை, ஆலந்தூர், எழும்பூர் நீதிமன்றங்கள் அனுமதியளித்தும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. இது திருமுருகன் உடல் நிலை தொடர்பாக பல சந்தேகங்களை எழுப்புகிறது. அவரது உயிருக்கு சிறையில் ஆபத்து உள்ளது என்று பலரும் குற்றம் சுமத்தி வரும் நிலையில், திருமுருகனை உடல் ரீதியாக நோயுற வைத்து அவரது அழித்தொழிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது. தமிழக அரசுதான் திருமுருகன் காந்தியின் உயிருக்கு உத்திரவாதத்தை வழங்க வேண்டும்.

#திருமுருகன்காந்தி #திருமுருகன்காந்தி_உயிருக்குஅச்சுறுத்தல் #வேலூர்_சிறையில்_திருமுருகன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*