தெறிக்க விட்ட ஷோபியா: பாஜக பணிந்தது எப்படி?

சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்!

சோபியாவுக்கு பெருகும் ஆதரவு :டிரெண்டிங் ஆகும் பாஜக ஒழிக!

எச்.ராஜாவுக்கு ஒரு ஜோசப் விஜய் கிடைத்தது போல தமிழிசைக்கு வந்து சிக்கியவர்தான் லூயிஸ் ஷோபியா. சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானத்தில் தமிழிசைக்கு பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ஷோபியா தமிழிசையிடம் விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால், அது தற்செயலாக நடந்தது போன்று இல்லை. அரசியல் உணர்வும், சமூக பொருப்பும் உள்ள ஷோபியா தமிழிசையை விமானத்தில் பார்த்ததுமே தமிழிசை தன்னுடன் விமானத்தில் இருக்கிறார். பாசிச பாஜக ஒழிக என்று தனக்கு கத்த வேண்டும் போலுள்ளது என்று பதிவும் செய்துள்ளார்.
தெளிவாக எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழிசையுடன் விவாதத்தில் ஈடுபட்ட ஷோபியா விமான நிலையத்தில் வைத்து பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்டுள்ளார். ஏற்கனவே ஷோபியா மீது ஏக கடுப்பில் இருந்து தமிழிசை தூத்துக்குடியில் இறங்கியதும் புதுக்கோட்டை மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் சொல்லி போலீசாரை அழைத்து ஷோபியாவை கைது செய்யும்படி கூறி இருக்கிறார்.
ஆனால், இந்த தகவல் கசிந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே ஷோபியாவுக்கு ஆதரவு பெருகிறது. பாஜக அரசின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியும் வெறுப்புமே ஷோபியாவுக்குக் கிடைத்த ஆதரவு. இதை பாஜக சற்றும் எதிர்பார்க்கவில்லை. தேசிய அளவில் ஷோபியாவுக்கு ஆதரவாகவும், பாசிச பாஜக ஒழிக என்றும் டோரோல்கள் ஹிட் ஆகின. டெல்லி பாஜக தலைமை அதிர்ச்சியடைந்து . தமிழிசையை தொடர்பு கொண்டு சில அறிவுரைகளை பாஜக தலைமை கூறியதாக செய்திகள் வெளியாகின.
ஏற்கனவே எச்.ராஜாவுக்கு எதிராக ஜோசப் விஜய் டிரெண்டிங் ஆனதும், #Gobackmodi உலக அளவில் டிரெண்டிங் ஆனதும். தமிழகத்தில் உள்ள அரசியல் நிலையை பாஜகவுக்கு உணர்த்துகிறது. திமுக பாஜகவோடு கூட்டணி சேராது என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்து விட்ட நிலையில், பிரதமர் மோடியை வைத்து தமிழகத்தில் பிரமாண்ட பேரணி நடத்த பாஜக திட்டமிடுகிறது. அப்படி பேரணிக்கு மோடி வரும் போது அவர் வருகைக்கு எதிராக எதுவும் டிரெண்டிங் ஆகி விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கும் பாஜக .ஷோபியா விவகாரத்தை இத்தோடு விட்டு விடும் படி அறிவுறுத்தியிருக்கிறது.
மேலும், தாழ்த்தப்பட்ட மக்களை பெரிய அளவில் பாஜகவுக்குள் இழுக்கும் முயற்சிகளுக்கு ஷோபியாவின் கைது எந்த விதமான இடைஞ்சலையும் உருவாக்கி விடக்கூடாது என்பதால் பாஜக அறிவுஜீவிகள் கொடுத்த ஐடியாவின் பேரிலும் தற்காலிகமாக ஷோபியா விவகாரத்தில் பாஜக பின் வாங்கியுள்ளது என்கிறது தகவல்கள்!

#Tamilisai_Soundararajan #DrTamilisaiBJP #தமிழிசை_சௌந்தரராஜன் #தமிழக_பாஜக #மோடி_அரசின்_வீழ்ச்சி#yougogirlsofia#isupportsofia #JusticeForSofia #பாசிசபாஜக_ஆட்சிஒழிக

அழகிரியை வரவேற்கச் சென்ற திமுக நிர்வாகி அதிரடி நீக்கம்!

புரட்சிப் பெண் சோஃபியா எதனால் எப்படி ஏன்?

”நானும் சொல்கிறேன் பாஜக ஒழிக-ஸ்டாலின் #IAM_SOFIA

டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா?

உங்கள் வீட்டிற்குள்ளும் ஒரு அபிராமி இருக்கலாம் சார்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*