தெலங்கானாவில் சந்திரசேகரராவுக்கு எதிராக தெலுங்குதேசம்-காங் கூட்டணி!

“பணம் கொடுப்பது வாங்குவது இரண்டுமே குற்றம்” -இபிஎஸ்!

எதிர்க்கட்சிகள் பந்த்; தமிழகத்தில் தோல்வியடைந்தது!

எழுவர் விடுதலை:காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு!

வைக்கம் விஜயலட்சுமிக்கு டும்…டும்..டும்!

The Nun விமர்சனம் – பிரபு தர்மராஜ்

தெலங்கானா மாநிலத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் பாஜக கூட்டணியில் இருந்து விலகி வந்த தெலுங்குதேசம் -காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் இடதுசாரிகளும் இணைந்துள்ளதால் சந்திரசேகரராவுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
தெலங்கானாவில் ஆளும் கட்சியாக இருந்து முதல்வராக இருந்தவர் சந்திரசேகர ராவ். இவர் சட்டமன்றத்தை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்தி வெற்றி பெறலாம் எனக் கணித்திருந்தார். இந்த ஆண்டு இறுதியில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோராம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது.இடைக்கால முதல்வராக தொடரும் சந்திரசேகரராவ் முன்கூட்டியே தேர்தலை நடத்தி வெற்றி பெறலாம் என நினைத்திருந்தார். காங்கிரஸ் கட்சிக்கு சவாலும் விடுத்தார். ஆனால், சந்திரசேகரராவ்-பாஜக கூட்டணியை வீழ்த்த அங்கு புதிய கூட்டணி உருவாகி உள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து விலகி வந்த தெலுங்கு தேசம்- காங்கிரஸ்- இடதுசாரிகள் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளார்கள். இந்த மூன்று கட்சிகளின் தலைவர்களும் ஆளுநரைச் சந்தித்து மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விட்டுத்தனர். முன்கூட்டியே தேர்தலை நடத்தும் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்வோம்” என்றும் அறிவித்துள்ளனர்.

#Telangana #சந்திரசேகரராவ் #தெலுங்குதேசம்_காங்_கூட்டணி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*