தோழர் ஓவியா தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்!

தெறிக்க விட்ட ஷோபியா: பாஜக பணிந்தது எப்படி?

சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்!

சோபியாவுக்கு பெருகும் ஆதரவு :டிரெண்டிங் ஆகும் பாஜக ஒழிக!

தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக கோஷமிட்ட லூயிஸ் சோபியாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களிலும், மக்களிடமும் பெரும் செல்வாக்கு உருவாகி இருக்கும் நிலையில் பெரியாரிஸ்ட் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் ஓவியா சோபியாவின் எதிர்ப்பு தவறு என்று கருத்து தெரிவித்துள்ளார்.

சோபியா போன்றவர்கள் இது போன்று செய்வதால்தான் தமிழகத்தில் அரங்கக் கூட்டம் நடத்தக் கூட அனுமதிக்கப்படுவதில்லை என்று தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கருத்து தெரிவித்தோடு தமிழிசையின் நடவடிக்கைகளை ஆதரிக்கிறார். ஒரு பெரியாரிஸ்ட் சோபியாவின் குரலில் பொதிந்துள்ள அரசியல் எதிர்ப்பையும், அது எந்த சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் கணிக்கத்தவறி பெண்ணியம் என்னும் புரிதலில் சோபியா என்னும் பெண்ணை பலியாக்கி பாஜக கட்சியின் தலைவரான தமிழிசையை ஆதரிக்கிறார். இதற்கு முற்போக்கு இயக்கங்களைச் சேர்ந்தவர்களே ஓவியாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் அரசியல் செய்த அத்தனை தலைவர்களுமே அரசியல் களத்தில் எதிர்ப்பை சந்தித்தவர்கள்தான். தந்தை பெரியார் மீது அவரது எதிர்ப்பாளர்கள் செருப்பு வீசிய வரலாறு உண்டு. திமுக தலைவர் கருணாநிதிக்கும், ஏன் இப்போது திமுகவுக்கு தலைவராகியிருக்கும் ஸ்டாலினுக்குக் கூட சில இடங்களில் சிலர் எதிர்ப்புகளை பதிவு செய்தது உண்டு. ஆனால் அவர்கள் அனைவருமே தங்களை எதிர்த்தவர்களை சிறைக்கு அனுப்பியதில்லை எனும் நிலையில்தான் தமிழிசை பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட சோபியாவை சிறைக்கு அனுப்பினார்.

சோபியாவின் எதிர்ப்பு என்பது தமிழிசைக்கும் அவருக்குமான தனிப்பட்ட பகை அல்ல, இந்தியா முழுக்க பாஜகவின் ஆட்சியால் ஏற்பட்ட அடக்குமுறையின் வெளிப்பாடு அது. தமிழகத்தில் தமிழிசையாவது ஒரு குரலைத்தான் எதிர்கொண்டார். வடக்கில் பாஜக தலைவர் அமித்ஷாவின் வாகனமே மறிக்கப்படுகிறது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வாகனம் மறிக்கப்படுகிறது.மோடியோடு ஒரே மேடையில் அமர்ந்திருக்கும் பத்திரிகையாளர் முகத்திற்கு முகம் மோடியை விமர்சிக்கிறார். அதன் ஒரு சின்ன வடிவம்தான் சோபியாவின் எதிர்ப்பு. தனது எதிர்ப்பை பதிவு செய்ய தான் அறிந்த வழியில் அதை செய்திருக்கிறார் சோபியா.
தவிறவும், தமிழிசைக்கு எதிரான இந்த கோஷம் வெறுமனே சோபியாவின் குரல் மட்டுமல்ல, அது ஒட்டு மொத்த தமிழக மக்களின் குரல் அதனால்தான், பெருவாரியான ஆதரவு அவருக்குக் கிடைக்கிறது. ஒட்டு மொத்த இந்திய மக்களின் குரல் அதனால்தான் வடக்கு வரை சோபியா என்னும் பெயர் இன்று வடக்கிலும் பேசப்படுகிறது.

அரசின் அடக்குமுறையின் தன்மை மாறியிருக்கிறது. ஒருவரை சுட்டுக் கொன்றாலே அது பெரிய அதிர்ச்சியை உண்டாக்கிய காலம் முடிந்து போய் 13 பேரை நாயைச் சுடுவது போல சர்வ சாதாரணமாக சுட்டுக் கொன்று விட்டு. இரண்டே மாதங்களுக்குள் ஆலை நிர்வாக ரீதியாக இயங்கலாம் என்று சொல்லும் அளவுக்கு அரசு இயந்திரம் மிருகத்தனமாக மாறியிருக்கிறது. எதிர்ப்பை பதிவு செய்வதற்கான ஜனநாயக வழிகள் அடைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. மோடி பிரதமரான பிறகு அரங்கக் கூட்டங்களுக்கு கூட அனுமதியில்லை, கார்டூன் போடுகிறவர்கள், ஜோக் எழுதுகிறவர்கள், முட்ட வரும் மாட்டை துரத்துகிறவர்கள் கூட கைது செய்யப்படுகிறார்கள். எதிர்ப்பை பதிவு செய்யும் வழிமுறைகள் அடைக்கப்பட்ட காரணத்தால்தான் விமானத்தில் கோஷமிடும் நவீன எதிர்ப்பு வடிவத்தை சோபியா தவறவிடவில்லை.
எப்படி அரசு இயந்திரத்தின் ஒடுக்குமுறையின் வடிவம் மாறுகிறதோ அப்படியே எதிர்ப்பவர்களும் தங்களின் எதிர்ப்பு வடிவத்தை நவீனமாக மாற்றியிருக்கிறார்கள்.மீம்ஸ்கள், ஷேஷ்டேக் எல்லாம் அதன் இன்னொரு வடிவங்களே…

பெரியாரிஸ்ட் ஓவியா 20 ஆண்டுகளுக்கு முந்தைய பெண்ணியத்தையும், அரதப்பழைய எதிர்ப்பு வடிவங்களையும் வைத்துக் கொண்டு சோபியாவை எதிர்க்கிறார். அவர் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

#Tamilisai_Soundararajan #DrTamilisaiBJP #தமிழிசை_சௌந்தரராஜன் #தமிழக_பாஜக #மோடி_அரசின்_வீழ்ச்சி#yougogirlsofia#isupportsofia #JusticeForSofia #பாசிசபாஜக_ஆட்சிஒழிக

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*