தோழர் ஓவியா பேசியது முற்றிலும் தவறானதா?-ராஜ் தேவ்!

விண்ணை முட்டும் பெட்ரோல் விலை- நிதி ஆயோக் அளித்த பதில் இதுதான்!

தமிழிசைக்கு ஆதரவா :ஓவியா பதில்!

தோழர் ஓவியா தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்!

தமிழிசையை நோக்கி சோஃபியா முழக்கமிட்டப் பிரச்சினையில் தோழர் ஓவியா மாற்றுக்கருத்தை கொண்டுள்ளார். அதனாலேயே அவருடைய இதுவரையிலுமான நிலைப்பாட்டை அறிந்து கொள்ள மனமில்லாத சிலர் தூற்றுகின்றனர். எனினும் வருகின்ற எல்லா விமர்சனங்களையும் அப்படி சொல்லி விட முடியாது. முதலில், அவர் கேட்டிருக்கின்ற கேள்வி என்னவென்று பார்ப்போம்.

தமிழிசையை நோக்கி உரக்க முழக்கமிட்டதை போன்று மற்ற பல அரசியல் தலைவர்களிடம் நடந்து கொண்டால் என்ன மாதிரி விளைவுகள் இருக்கும் என்று கேட்டுள்ளார். இந்த கேள்வி தமிழிசைக்கு ஆதரவானது என்றே பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை. ஒரு அறம் சார்ந்த கேள்வியாக தான் அதை நம்முன் வைக்கிறார். நம்மிடம் இருக்க வேண்டிய ஜனநாயக உருப்படிகள் பற்றிய கேள்வி அது. எனவே அதற்கு அரசியல் தலைவர்கள் பொதுவாக எப்படி நடந்து கொண்டுள்ளார்கள் என்பது முதற்கொண்டு சில நடைமுறை உதாரணங்களுடன் பார்ப்போம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது சிதம்பரம் மீது செருப்பு வீசப்பட்டது. அந்த நபரை போலீஸ் கைது செய்திருந்தாலும் தமிழிசையை போன்று சிதம்பரம் நடந்து கொள்ளவில்லை. அதே போன்று அரவிந்த் கேஜ்ரிவால் முதலமைச்சரான பிறகே அவர் மீது கருப்பு மை பூசப்பட்டது. பிரசாந்த் பூசன் ‘ஆம் ஆத்மியில்’ செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அலுவலகத்துக்குள் வைத்தே அவர் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த மூன்று சம்பவங்களிலும் முதல் மற்றும் மூன்றாவது சம்பவங்கள் தாக்குதல் பாணியாகவும், இரண்டாவது சம்பவம் ஒரு தலைவரை அவமானப்படுத்துதலாகவும் அமைந்தன.

தமிழிசைக்கு நேர்ந்தது இந்த இரண்டு வகையிலானதுமில்லை – அவர் அவமானப்படுத்தப்படவோ அல்லது தாக்கப்படவோ இல்லை. அரசியல் உணர்வு படைத்த தனிநபர் ஒருவரின் எதிர்வினை. ஆத்திரமடைந்த ஒருவரை தணிக்கின்ற மென்திறன் அணுகுமுறையை ஒரு தலைவர் என்ற முறையில் கையாள தவறியவர் தமிழிசை தான். தந்தை பெரியார் மீது செருப்பு வீசப்பட்ட போது அதை கையாண்ட அவர் அணுகுமுறை மென்திறன் கல்வியில் இணைத்து பயிலத்தக்கது. வைகோ ஒருமுறை பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் ‘வைகோ 40 கோடி ஜெயலலிதாவிடமிருந்து பெற்றதாக’ கூறினார். அதற்கு அவர் ஆத்திரப்படவில்லை. தனிநபர் ஒருவரின் கோப எதிர்வினையை கையாள்கின்ற மென்திறன் அணுகுமுறைகளை டேல் கார்னெஜி என்ற அமெரிக்க எழுத்தாளர் சிந்தித்துள்ளார். அவர் எட்வர்ட் ஹப்பர்டு எனும் எழுத்தாளரின் அணுகுமுறையை முன்னுதாரணமாக குறிப்பிடுவார். ஆத்திரம் கொள்ளும் வாசகர்களிடம் ‘வீட்டுக்கு வாங்க; காஃபி சாப்பிட்டுக் கொண்டே பேசுவோம்’ என்பாராம். தமிழிசையிடம் கூட ‘மிகவும் கடினமான’ கேள்விகளை ஊடகவியலாளர்கள் இதற்கு முன்பு கேட்டுள்ளனர். அவற்றிற்கு ‘தம்பி, தம்பி’ என்று அந்த ஊடகவியலாளர்களை விளித்துத் தான் பேசுவார்.

சோஃபியாவிடம் தமிழிசை உணர்ச்சிவசப்பட்டதேன்?

ஒரு பெண் தலைவராக அவர் அடைந்த நெருக்கடியினாலோ, அல்லது தனிநபரின் அத்துமீறலால் அடைத்த பதற்றத்தின் விளைவோ அல்ல அது. மாறாக, தமிழிசை ஏற்றுள்ள அரசியலை மிகவும் கூர்மையான சொல்லாடலில் எந்த வர்ணப்பூச்சும் இல்லாமல் அம்பலப்படுத்துகிறது. இது வரையிலும் எங்கோ தூரத்தில் கேட்டுக்கொண்டிருந்த எதிர்ப்புக்குரல் ஒன்று மிக அணுக்கமாக தனது காதுகளில் ஒலிக்கிறது. அதனால் அடைந்த பதற்றம் தான் அது. இந்த சம்பவத்தை அவர் கடந்து சென்றிருக்கவும் முடியும். ஆனால் அதற்கு முயலாததிலும் கூட ஒரு செய்தி விடுகை உள்ளது. அது இது போன்ற முழக்கங்கள் கேள்விகளாக ஊடகங்கள் மூலமாக வரக்கூடாது என்பது தான். ஒரு வேளை திமுக தலைவர் ஸ்டாலின் பாசிச பாஜக ஆட்சி என்று முன்கையெடுத்து கூறவில்லை என்றால் ஊடகங்கள் சோஃபியாவின் வார்த்தைகளை சர்ச்சைக்குரிய முழக்கம் என்று தான் குறிப்பிட்டிருக்கும். ஸ்டாலின் காலத்தேவையை உணர்ந்து மிகவும் சரியாக செயல்பட்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

தோழர் ஓவியா பேசியது முற்றிலும் தவறானதா?

இந்த கேள்வியை சரி/தவறு கோணத்தில் அணுகுவதை விடவும் நம்மிடையே தோன்றும் ஒரு மாற்றுக்கருத்தை பொதுவெளியில் பகிர்வது தொடர்பான புரிதல் பற்றிய பிரச்சினை என்று சொல்லலாம். தி.க. தலைவர் ஆசிரியர் வீரமணியை சாரட் வண்டியில் அழைத்து வந்ததும் கூட நட்பு சக்திகளை சேர்ந்த பலரால் விமர்சிக்கப்பட்டது. அது தவறில்லை. ஆனால் அது தொடர்பாக மாற்றுக்கருத்து உள்ள ஒருவர் டி.வி. போன்ற ஒரு பொது ஊடகத்தில் விவாதிப்பது உள்நோக்கமுடையது. மாற்றுக்கருத்துக்கள் நிச்சயம் உருவாக வேண்டும். அது மட்டும் தான் நம்மை துடிப்புடன் இயங்க வைக்கும். பிஜெபியை மட்டும் விமர்சித்துக் கொண்டிருந்தால் போதாது. மார்க்சியம், தமிழ்த்தேசியம், தலித்தியம், கலை இலக்கியத் தூய்மைவாதம் என்று ஒன்றுபடும் புள்ளிகளையுடைய அரசியல் சித்தாந்தங்களுடன் கூட விவாதம் அவசியம். ஆனால் அது அடிப்படை ஒற்றுமையை சீர்குலைப்பதாக இருக்கக்கூடாது. தோழர் ஓவியாவை பொறுத்தவரையில் நாம் கடினப்பட்டு விளக்க முயற்சிக்கும் ஒன்றை கூட மிக எளிமையாக தேர்ந்த சொற்களில் விளக்கத் தெரிந்தவர். தன்னுடைய கருத்தை தெரிவிக்க முழு உரிமை அவருக்குள்ளது. என்றாலும் இந்த விசயங்களை பரிசீலிக்கத் தயங்காதவர் இல்லை அவர்.

#Tamilisai_Soundararajan #DrTamilisaiBJP#தமிழிசை_சௌந்தரராஜன் #தமிழக_பாஜக#மோடி_அரசின்_வீழ்ச்சி #yougogirlsofia #isupportsofia#JusticeForSofia #பாசிசபாஜக_ஆட்சிஒழிக #Ovia_Rajamoni

தெறிக்க விட்ட ஷோபியா: பாஜக பணிந்தது எப்படி?

சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்!

சோபியாவுக்கு பெருகும் ஆதரவு :டிரெண்டிங் ஆகும் பாஜக ஒழிக

ஸ்டெர்லைட் பற்றி மார்ச் மாதம் சோஃபியா எழுதிய கட்டுரை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*