நாகர்கோவில் கொலைகார தனியார் பள்ளிகள்!

தோழர் ஓவியா பேசியது முற்றிலும் தவறானதா?-ராஜ் தேவ்!

விண்ணை முட்டும் பெட்ரோல் விலை- நிதி ஆயோக் அளித்த பதில் இதுதான்!

தோழர் ஓவியா தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்!

சீரழிந்து வியாபாரமாகி விட்ட கல்விச்சூழலில் நாம் நாமக்கல் பள்ளிகளை மட்டுமே மோசமான சித்திரவதைக் கூடங்களாக பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சத்தமில்லாமல் நாகர்கோவில் மற்றும் குமரி மாவட்ட பள்ளிகள் கொடூரமான சித்திரவதைக் கூடங்களாக மாறி யிருக்கிறது.
பெரும்பலான தனியார் பள்ளிகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை பள்ளிகள் வைக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் 6 மணிக்கு இருந்தாக வேண்டும். இல்லை என்றால் தண்டனை தனி.
சில பள்ளிகள் அதிகாலை 5-30 மணிக்கு வகுப்புகளை துவங்கி விடுகிறார்கள். மாலை 8 மணிவரை வைக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை கற்பனை செய்து பாருங்கள் எத்தனை கொடூரம் என்று,, கால் இறுதி தேர்வுகளின் பின்னர் கிடைக்கும் விடுமுறை, அரையிறுதி தேர்வுகளுக்குப் பின்னால் விட வேண்டிய விடுமுறைகள் என எதுவும் கிடையாது. கல்வியில் முன்னேறியதாக கூறப்படும் குமரி மாவட்ட பெற்றோரில் பெரும்பான்மையானவர்கள் இம்மாதிரி பள்ளிகளில் படிக்க வைத்தால்தான் உண்மையான படிப்பு என நம்புகிறார்கள். இதனால் பல பிள்ளைகள் வகுப்பறைகளிலேயே சுருண்டு விழுந்து இறந்திருக்கிறார்கள்.

கல்வித்துறையில் நிலவும் ஊழல்தான் இந்த தடித்தனமான அராஜகமான கல்வி முறைக்கு காரணம். மேலும், ஏன் அதிகாலை வகுப்பு வைக்கிறார்கள் என்றால். அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் காலை வகுப்பிற்குச் செல்வதற்கு முன்னால் அதிகாலை வந்து தனியார் பள்ளிகளில் வேலை செய்கிறார்கள். இதற்கு ஆண்டுக்கு 3 லட்சம் வரை பள்ளி நிர்வாகங்கள் இந்த ஆசியர்களுக்கு ஊதியம் வழங்குகிறார்கள்.
அது போல, மாலை அரசுப்பள்ளியில் வேலையை முடித்து விட்டு மாலையில் வந்து விடுகிறார்கள்.இரவு 8 மணிவரை வகுப்பு நடத்துகிறார்கள். அரசுப்பள்ளி ஆசியர்களில் சிலர் இது போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இதை கல்வித்துறை கண்டு கொள்வதில்லை. இதை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் இந்த கொலைபாதகச் செயலில் ஈடுபட்டு வருகிறது.
சரி இத்தனையும் செய்து இவர்களால் மதிப்பெண்ணில் சாதிக்க முடிந்ததா என்றால் இல்லை என்று ஒரே வரி பதில்தான். கூடுதாலக ஒரு தகவல் இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தோல்வியடைகிறார்கள்.

#kanyakumari_schools #Private_Schools #தனியார்பள்ளிகள் #கட்டணக்கொள்ளைகள்

தெறிக்க விட்ட ஷோபியா: பாஜக பணிந்தது எப்படி?

சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்!

சோபியாவுக்கு பெருகும் ஆதரவு :டிரெண்டிங் ஆகும் பாஜக ஒழிக

ஸ்டெர்லைட் பற்றி மார்ச் மாதம் சோஃபியா எழுதிய கட்டுரை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*