நிலானிக்கு காதலை மறுக்கும் உரிமை இல்லையா?

ஹெச்.ராஜாவை :உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாது ஏன்?

தனிப்படை அமைப்பு? -வேடசந்தூரில் பேசிக் கொண்டிருக்கிறார் எச்.ராஜா!

மேலே விநாயகர் :கீழே மிக்ஸ்சிங் சைடிஸ் பிரியாணி-Video!

காதலை மறுத்த காரணத்திற்காக சீரியல் நடிகை நிலானியின் முன்னாள் காதலரும், நண்பருமான காந்தி லலித் குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்ற போதிலும், இதில் நடிகை நிலானியின் மீது குவிக்கப்படும் கருத்தியம் வன்முறைகளும், அவரது அந்தரங்க வெளி மீது நடத்தப்படும் தாக்குதலும் பல கேள்விகளை எழுப்புகிறது.
கடந்த சில ஆண்டுகளாக லலித் குமாருடன் நிலானி நெருங்கிப் பழகியிருக்கிறார். அது காதலா இருவருக்குமிடையில் என்ன அடிப்படையில் பழகினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், காந்தி லலித் குமாருடனான நட்பு அல்லது காதல் ஒத்து வராத நிலையில், நிலானி அவரது காதலை மறுத்துள்ளார்.
நெருங்கிப் பழகி விட்டு கைவிடலமா என்பதுதான் காந்தி லலித்குமார் தரப்பினரின் கேள்வி. நெருங்கிப் பழகினாலும், பழகாவிட்டாலும் இருவரில் ஒருவர் நட்பையோ, காதலையோ முறித்துக் கொள்ள விரும்பினால் பரஸ்பரம் விலகி விடுவதே இருவருக்கும் நல்லது. லலித் தற்கொலை விவகாரத்தில் நிலானி குற்றவாளியாக்கப்படுவதற்கு அப்பால். காந்தி லலித் குமாரை நிலானி கையாண்ட விதம் தவறாக இருக்கலாம். ஆனால், காதலை ஏற்பதோ மறுப்பதோ, பழகி விட்டு இடையில் முறித்துக் கொள்வதோ அது பெண்ணின் தேர்வுதான். அதில் இன்னொருவர் தலையிட முடியாது.
காந்தி லலித்குமார் தற்கொலை செய்து விட்ட நிலையில், நிலானியும் லலித்தும் இணைந்திருக்கும் விடியோக்கள், புகைப்படங்களை எடுத்து அவரது நண்பர்கள் இணைய வெளிகளில் வெளியிட்டு நிலானியை கேரக்டர் அசாசினேஷன் செய்து வருகிறார்கள்.
காந்தி லலித்குமாரின் தற்கொலைக்காக நிலானி மீது என்ன விதமான நடவடிக்கை இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் பொது வெளியில் நிலானியின் படங்களை வெளியிடுவதன் மீது சைபர் குற்றச் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

#NILANI #Gandhi_Lalith_kumar_suside #நிலானி #காந்திலலித்குமார்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*