பாஜகவுக்கு எதிரான டெல்லி பேரணி திமுகவும் களமிரங்கியது!

உ.பி காட்டுமிராண்டித்தனம் :ஆப்பிள் நிறுவன அதிகாரி சுட்டுக்கொலை!

சபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநிலம் தழுவிய பந்த்!

திருமுருகன் உயிருக்கு ஆபத்து?

‘பரியேறும் பெருமாள் ‘ குறைவான காட்சிகள்தான்-மக்களிடம் பெருகும் ஆதரவு!

ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளைக் கண்டித்து எதிர்க்கட்சிகளின் இளைஞரணியினர் பங்கேற்கும் பிரமாண்ட பேரணி டெல்லியில் நடக்க இருக்கிறது இந்த பேரணியில் திமுக இளைஞரணியும் பங்கேற்க இருக்கிறது.
பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் இளைஞர் அணியினர் பேரணி நடத்த ஒருங்கிணைந்த இளைஞர் அமைப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கொள்கைகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் அக்டோபர் 8-ஆம் தேதி பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற இருக்கிறது. இதில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றமும், சமாஜ்வாதி கட்சி, தேசியவாத மாணவர் காங்கிரஸ், ராஷ்டிரிய லோக் தளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, பார்வார்ட் பிளாக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அமைப்புகளின் இளைஞர் பிரிவினர் இந்த பேரணியில் பங்கேற்க இருக்கிறார்கள்.
நாடு முழுக்க அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலை, வங்கி மோசடி, ரஃபேல் போர் விமான ஊழல், சாதி, மத வன்முறைகள், உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராக இந்த பேரணி நடத்தப்படுகிறது.

 

#பாஜக_காங்கிரஸ் #பாஜக_எதிர்ப்புபேரணி #ராகுல்காந்தி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*