பாஜக எம்.பி தருண் விஜய்க்கும் அட்மின் பிரச்சனை!

ஸ்டெர்லைட் பற்றி மார்ச் மாதம் சோஃபியா எழுதிய கட்டுரை!

தோழர் ஓவியா தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்!

தெறிக்க விட்ட ஷோபியா: பாஜக பணிந்தது எப்படி?

சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்!

சோபியாவுக்கு பெருகும் ஆதரவு :டிரெண்டிங் ஆகும் பாஜக ஒழிக

பாஜக முன்னாள் எம்.பி தருண் விஜய்யின் டுவிட்டர் கணக்கில் இருந்து ராகுலை ஆதரித்தும் பிரதமர் மோடியை விமர்சித்தும் வெளியிடப்பட்ட ட்விட்டுகளுக்கு அட்மின் காரணம் என்பதால் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கைலாஷ் யாத்திரை சென்றிருந்தார். ராகுலின் கைலாஷ் யாத்திரையை ஆதரித்தும் இரண்டு ட்விட்டுகளும், பின்னர் பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்து சில பதிவுகளும் வெளியானது. பாஜக எம்.பியான தருண் விஜய்யின் டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியானதால் பரபரப்பானது. பெருமளவு இந்த ட்விட்டுகள் ஷேர் ஆன நிலையில் அவரது கணக்கு முடக்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த போது ட்விட்டுகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன. “வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து சிலர் எனக்கு விரோதமாக செயல்படுகிறார்கள். நானும் என் குடும்பத்தினரும் பாஜகவுக்கும், பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கும் காலம் முழுக்க நன்றிக்கடன் பட்டவர்கள்.காலை முதல் இரவு வரை அவர்களுக்காகவே பணியாற்றுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ள தருண் விஜயக்கு தலைவலி உருவானதும் அட்மினால்தானாம்.
தனது ட்விட்டர் கணக்கில் இருந்து பதிவுகள் போட்டதற்காக அட்மின் மீது புகார் அளித்துள்ளார். தமிழகத்தில் எச்.ராஜா பெரியார் தொடர்பாக பதிவு போட்டு விட்டு அட்மின் மீது பழி போட்டு எஸ்கேப் ஆனது போல தருண் விஜய்யும் அட்மினை காரணம் சொல்கிறார்.

#Darunvijaymp #தருண்_விஜய் #பாஜக_எம்பி #அட்மின்_பிரச்சனை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*