பாஜக தலைமை பதவி :எஸ்.வி.சேகரை அரசியலிலும் காமெடியனாக்கிய தமிழிசை!

குடி வீட்டுக்கு கேடு-மோடி நாட்டுக்கு கேடு- போர்ட் போட்டு பிரச்சாரம் செய்யும் நந்தினி!

எங்கள் பிரதமர் திருடர் வைரலான #Mera_PM_Chor_Hai

ஊழல் மூட்டை எடப்பாடி பழனிசாமி :ஸ்டாலின் காட்டம்!

கருணாஸுக்கு ஒரு நீதி எச்.ராஜாவுக்கு ஒரு நீதியா? -ஸ்டாலின் கண்டனம்!

எச்.ராஜாவை விட்டு விட்டு கருணாஸை கைது செய்த போலீஸ்!

தமிழக காங்கிரஸ் கட்சியிலானது தலைவர்கள் ஆளுக்கொரு கோஷ்டியை வைத்திருப்பார்கள்.அதில் எல்லா சாதியினரும் இருப்பார்கள். ஆனால் பாஜகவில் ஆளுக்கொரு கோஷ்டி இருக்கிறது. அதில் ஒவ்வொரு தலைவரும் தங்கள் தங்கள் சாதி ஆட்களை அணி திரட்டி வைத்திருக்கிறார்கள். குறிப்பாக பிரமாணவர்கள் – பிரமாணர் அல்லாதோர் பிரச்சனை தமிழக பாஜகவில் பெரிதாக உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் ராஜபாளையத்தில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்திற்கு நடிகர் எஸ்.வி.சேகருக்கு அழைப்பு இல்லை. இதனால் அப்செட் ஆன எஸ்.வி.சேகர் ஊடகங்களிடம் பேசும் போது:-
“ பாஜக தலைமை என்னை பயன்படுத்திக் கொள்ளவில்லை. என்னை பயன்படுத்திக் கொண்டால் கட்சிக்கு நல்லது. கட்சி என்னை பயன்படுத்திக் கொள்ளா விட்டால் எனக்கு ஒரு நட்டமும் இல்லை. இதற்காக நான் தமிழிசை வீட்டு வாசலில் போய் நிற்க வேண்டுமா?எல்லோரும் அவரை அக்கா என்கிறார்கள். அவர் என்னை விட வயதில் குறைந்தவர் என்பதால் எனக்கு அவர் தங்கைதான். தமிழக பாஜகவுக்கு தலைமையேற்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை ஏற்க தயாராக இருக்கிறேன். அப்படி ஏற்றால் கட்சியை பலமாக்குவேன்.இப்போதுள்ளதை விட அதிக வாக்குகளைப் பெறும் “என்று தெரிவித்தார். இது தொடர்பாக தமிழிசையிடம் கேள்வி கேட்கப்பட்டது, அப்போது அவர்:-
“ இதுக்கு பதில் சொல்றதை விட சிரிச்சிட்டு விட்றலாம். பல காமெடி நாடகங்களில் நடித்து நடித்து நாடகம்ணு நினைச்சி பேசிட்டார் போல அதனால் சிரிச்சிட்டே இதை விட்டு விடலாம். பாஜக தலைவர்னா அவ்வளவு இலகுவான விஷயமாக அவர் நினைத்து விட்டார்” என்றார் தமிழிசை,
பிராமணர் மேலாதிக்கம் கொண்ட பாஜகவில் பிறபடுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இப்படி பிரமாணவர்களையே கிண்டல் பண்ணுவது தமிழத்தில் மட்டுமே சாத்தியம்!

#SVESEKAR #TAMILISAI #டாக்டர்_தமிழிசை #எஸ்_வி_சேகர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*