பாஜக வெல்ல வேண்டும்: பழனிசாமிக்கு உத்தரவிட்ட மோடியின் தம்பி!

”பழகியது உண்மைதான் ஆனால் காந்தி லலித் குமார் ஒரு சைக்கோ” – நிலானி!

உதைக்கப்பட்ட ஆட்டோ டிரைவருக்கு ஸ்வீட் கொடுத்த தமிழிசை -Video

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரமாண்டமான முறையில் களமிரங்க பாஜக திட்டமிட்டிருக்கிறது. ஏற்கனவே அமித்ஷா வந்து சென்ற நிலையில், மோடி விரைவில் தமிழகம் வந்து பாஜக தொண்டர்களைச் சந்தித்து பேச இருக்கிறார். மோடி வருவதற்கு முன்னோட்டமாக பிரதமர் மோடியின் தம்பி பிரகலாத் மோடி சென்னை வந்திருக்கிறார். பாஜக பிரமுகர்களோடு செலவிட்ட நேரத்தை விட அதிமுக பிரமுகர்களோடு அவர் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசிய பிரகலாத் மோடி தனது சொந்த கட்சி நிர்வாகிகளை கண்டிப்பது போல பழனிசாமியிடம் பேசியிருக்கிறார். அது ஒரு அச்சுறுத்தலாகவே அமைந்திருக்கிறது. அரசுப் பதவிகள் எதிலும் இல்லாத பிரகலாத் மோடி முதல்வர் பழனிசாமியை தன் கட்சியின் கீழ் மட்ட தலைவர் போல நடத்தியிருக்கிறார். கொங்கு மண்டலத்தில் பாஜகவை பலப்படுத்துவது தொடர்பாக அவர்கள் உரையாடல் அமைந்திருக்கிறது. அது போல உட்கட்சி பிரச்சனைகளையும் பேசியிருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்த பிரகலாத் மோடி பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கியை பாஜக பக்கம் கொண்டு வருவதற்காக வழி வகை தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.


முக்கியமாக நமக்காக செய்தி எழுத ஏராளமான பத்திரிகையாளர்களை உருவாக்கி விட்டோம். பாரம்பரிய பத்திரிகைகள் என மார்த்தட்டிக் கொண்டவர்களையே 24 மணி நேரமும் நம்மைப் பற்றிய லைஃவ்களை முகநூல் வழியாக போட வைத்து விட்டோம். பாஜகவை நேரடியாக ஆதரிக்க முடியாதவர்களுக்கு. திமுக எதிர்ப்பை அஜெண்டாவாக்கியிருக்கிறோம். இனி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக, பாஜக ஓரணியாக செயல்படும் வழிவகைகளை நோக்கி வேகமாக நகர வேண்டும் என்று பேசியதாக தகவல்கள் கசிகிறது.
சரி, அவர் சந்தித்த இன்னொரு முக்கிய நபர் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த். வரவிருக்கும் தேர்தலில் தேவர் சாதி வாக்குகளையும், கொங்கு பகுதி வாக்குகளையும், தென் தமிழகத்தின் நாடார் சாதி மக்களின் வாக்குகளும் நமக்குக் கிடைத்தால் போதும் என்று அதிமுக பாஜகவுக்கு ஐடியா கொடுத்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளும் பாஜகவுக்கு. அதிமுக வெல்லும் தொகுதிகளும் பாஜக ஆதரவு அதிமுக வேட்பாளர்களே வெல்ல வேண்டும் என்கிற ரீதியில் ஒரு விசித்திர கூட்டணியை ஓபிஎஸ்- இபிஎஸ் பாஜகவோடு பேசுகிறார்கள். சட்டமன்ற தொகுதிகளில் கணிசமானவை ஓபிஎஸ்- இபிஎஸ் அணியினருக்கு என்று பேச்சு முடிவாகியிருக்கிறதாம்.
ஆனால், இந்த சந்திப்புகள் அதிமுகவினரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு எதற்கு அதிமுகவுடன் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கேள்விக்கு. அவர்களுக்கே பதில் தெரியவில்லை உண்மையில் அதிமுக என்ற கட்சி தமிழகத்தில் இருக்கிறதா அல்லது பாஜக என்னும் ஜோதியில் கலந்து கரைந்து கொண்டிருக்கிறதா அதிமுக என்று குழம்பிக் கிடக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

#நாடாளுமன்றதேர்தல் #2019_நாடாளுமன்றதேர்தல் #பிரகலாத்மோடி

புயல் வரலாம் -தாங்குமா தமிழகம்? -அருள் ரத்தினம்!

நிலானிக்கு காதலை மறுக்கும் உரிமை இல்லையா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*