புரட்சிப் பெண் சோஃபியா எதனால் எப்படி ஏன்?

”நானும் சொல்கிறேன் பாஜக ஒழிக-ஸ்டாலின் #IAM_SOFIA

டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா?

உங்கள் வீட்டிற்குள்ளும் ஒரு அபிராமி இருக்கலாம் சார்!

தமிழகத்தில் வெல்ல மோடியின் முகம் கைகொடுக்குமா?

விமானப்பயணத்தின் போது தமிழக பாஜக தலைவர் தமிழிசையுடன் விவாதத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் சோஃபியா என்ற மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசியில் பாஜக கட்சியில் தலித் மக்கள் ஆயிரம் பேர் இணையும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் பங்கேற்க தமிழக பாஜக தலைவர் தமிழிசை தூத்துக்குடி செல்கிறார். அப்போது அவரது பின்னிருக்கையில் இருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த சோஃபியா என்ற 23 வயது மாணவி தமிழிசையுடன் அரசியல் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஸ்டெலைட் படுகொலைகள், பணமதிப்பிழப்பு, நீட், உள்ளுட்ட நாட்டின் பெரும்பான்மை பிரச்சனைகளுக்கு பாஜகவே காரணம் என்று விவாதம் செய்த சோஃபியா விமானத்தில் இருந்து இறங்கிய பின்னர் “பாசிச பாஜக ஒழிக” என்று கோஷம் எழுப்பியதாக தெரிகிறது. சோஃபியாவின் நடவடிக்கையால் கோபமடைந்த தமிழிசை புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சோஃபியா கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மருத்துவர் சாமியின் மகளான சோஃபியா மீது பிரிவுகளில் (இபிகோ 290, 75(1)(C) ) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கனடாவில் படிக்கும் ஆராய்ச்சி மாணவியான சோஃபியா விடுமுறைக்காக ஊருக்கு வரும் போது தமிழிசையுடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.சோஃபியாவுக்கு 10 பேர் கொண்ட பாஜக குழுவினர் கொலை மிரட்டல் விடுத்த போதிலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாத காவல்துறை சோஃபியாவை கைது செய்துள்ளது.

சோஃபியா புரட்சிப் பெண் ஏன்?

இந்தியாவில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடைமுறையில் உள்ளதாக பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும், அரசியல் கட்சிகளும் குற்றம் சுமத்தி வருகிறன்றன. நாட்டின் பெரும்பான்மை ஊடகங்களை பாஜகவினர் கட்டுப்படுத்துகிறார்கள். அல்லது அப்படியான ஊடகங்களை நடத்துவதே பாஜக ஊட்டி வளர்க்கும் முதலாளிகள்தான். தமிழகத்தைப் பொருத்தவரை பெரும்பான்மை தொலைக்காட்சிகள் ஆளும் அதிமுக அரசின் ஊதுகுழல்களாகவும், பாஜகவின் பிரச்சாரக்கருவியாகவுமே உள்ளது. ஒவ்வொரு விவாதங்களின் போதும் பாஜகவுக்கு இரண்டு இருக்கைகளை ஒதுக்கி பாஜகவின் கருத்துக்களை மக்களிடம் திணித்து வருகிறது. இதே காலத்தில் ஊடகங்கள் ஒடுக்குமுறையையும் ஒரு பக்கம் சந்திக்கிறது. எழுதுகிறவர்கள், பேசுகிறவர்கள், வரைகிறவர்கள் என பாஜகவுக்கு எதிராக உணர்வுகளை பிரதிபலிக்கிறவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

ஊடகங்களில் ஒரு முக்கல் முனகல் கூட பாஜகவுக்கு எதிராக இல்லாத நிலையில் சமூக வலைத்தளங்களில் பாஜகவுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு காணப்படுகிறது. தமிழகத்தில் நிலவும் மவுனத்திலிருந்துதான் சோஃபியாவின் குரல் எத்தனை முக்கியமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

23 வயதே ஆன சோஃபியா தூத்துக்குடி மருத்துவர் சாமி என்பவரின் மகள். செல்வச்செழிப்பான பின்னணியில் பிறந்து வசதியாக வாழ்ந்த பெண். அப்பா ஆராய்ச்சிக் கல்விக்காக கனடா அனுப்புகிறார். அவரும் கனடாவில் படித்து சகல வசதிகளுடனும் தனது இளம் பருவத்தை பெரும் கொண்டாட்டங்களுடன் கடந்திருக்க முடியும். ஆனால் சமூக அக்கறை கொண்ட பெண்ணாக இருக்கும் சோஃபியா தமிழிசையிடம் ஸ்டெர்லைட் ஆலைக்காக நடத்தப்பட்ட 13 பேர் படுகொலைகள் தொடர்பாக விவாதம் செய்திருக்கிறார். நீட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அவரிடம் தன் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். சோஃபியாவுக்கும் தமிழிசைக்கும் தனிப்பட்ட பகை எதுவும் இல்லை. சோஃபியா பாஜகவுக்கு தன் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய நிலையில், மிகச்சரியாக தன் தமிழக தலைவர் தமிழிசையிடம் தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.
மோடிக்கு எதிராக பாஜகவின் மக்களுக்கு எதிரான ஆட்சிக்கு எதிராக நிலவும் மவுனத்தை உடைத்து சோஃபியா பேசிய கருத்துக்களும் , பேசிய காலமும், பேசிய நபரும், பேசிய இடமும் மிக மிக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இனி தமிழிசையே நினைத்தாலும் கூட சோஃபியாவை அடக்கி விட முடியாது. அவர் தமிழக மக்களின் புரட்சி அடையாளமாக போற்றப்படுவார்.

அழகிரி கருணாநிதியின் விருப்பத்திற்குரிய மகனா?

#மேற்குத்_தொடர்ச்சி_மலை -அருண் நெடுஞ்செழியன் பார்வை!

#Tamilisai_Soundararajan #DrTamilisaiBJP #தமிழிசை_சௌந்தரராஜன் #தமிழக_பாஜக #மோடி_அரசின்_வீழ்ச்சி#yougogirlsofia#isupportsofia #JusticeForSofia

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*