பெட்ரோல் டீசல் விலை உயர்வது ஏன்? – முஸ்லீம் நாட்டில் எண்ணெய் வாங்குமா இந்தியா?

தனிமைச்சிறையில் திருமுருகன் :பண்ருட்டி வேல்முருகன் கண்டனம்!

மெகுல் சோக்‌ஷி இந்தியா கொண்டு வரப்படுவாரா?

“உண்மையோ பொய்யோ எதையாவது வைரலாக்குங்கள்” -பாஜக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட அமித்ஷா!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து. ஈரானுடன் எண்ணெய் வணிகத்தில் யாரும் ஈடுபடக்கூடாது என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் இந்தியா ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரான் மீது பொருளாதாரத்தடைகளை விதித்துள்ள அமெரிக்கா ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், இந்தியா தங்களுக்கு மட்டும் இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. கடந்த வாரம் இந்தியா வந்திருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவிடம் இந்த கோரிக்கையை இந்தியா வைத்த நிலையில் அதை பரிசீலனை செய்வதாக அவர் சொல்லிச் சென்றார்.வருகிற நவம்பர் மாதம் முதல் தடைகள் அமலுக்கு வர விருக்கும் நிலையில், ஐநா பொதுச்சபை கூட்டத்திற்குச் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜாரிஃபை சந்தித்து பேசினார். இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பாகவும் பேசியதாகத் தெரிகிறது.இச்சந்திப்பின் பின்னர் பேசிய முகமது ஜாவித்:-
“இந்தியாவின் நம்பத்தகுந்த நண்பனாக இந்தியா இருந்து வருகிறது. எங்கள் இந்திய நண்பர்கள் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி போன்றவற்றை நோக்கத்தின் அடிப்படையில் செய்கிறவர்கள். இதே கருத்தை சுஷ்மா சுவராஜ் என்னிடமும் தெரிவித்தார்.இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு எண்ணெய் இறக்குமதியில் தொடர்கிறது மேலும் தொடரும்” என்றார்.
அமெரிக்காவின் பொருளாதார தடையை எப்படி எதிர்கொள்வது என்று பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகள் ஆலோசித்து வரும் நிலையில் உலக அளவில் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.ஆனல், அமெரிக்க பொருளாதார தடைகளுக்குப் பிறகு இந்தியா ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் அளவை குறைத்தது. அதிக விலை கொடுத்து அமெரிக்காவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதால்தான் இந்திய சந்தைகளில் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்கடங்காமல் விலை உயர்ந்து செல்கிறது.

#ஈரானிடம்_இருந்து_எண்ணெய்_இறக்குமதி #MohammadJavadZarif #SushmaSwaraj #UNGA

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*