பெண்களையும் பொதுமக்களையும் அச்சுறுத்துவோருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

”20 நிமிடங்கள் வரை மல்லையா அருண்ஜெட்லியுடன் பேசினார்”- காங் குற்றச்சாட்டு

சாரிடான் உள்ளிட்ட மருந்துகளுக்கு தடை!

கேரளத்தில் மழைக்குப் பிந்தைய வறட்சிக்கு வாய்ப்பு!

பெரம்பலூர் அருகில் திமுக பிரமுகர் ஒருவர் அழகு நிலையம் ஒன்றுக்குள் புகுந்து பெண் ஒருவரை அடித்து உதைக்கும் விடியோ வெளியாகி உள்ள நிலையில், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
பெரும்பலூர் பாரதி தாசன் நகரில் அழகு நிலையம் நடத்தி வருகிறார் சத்தியா என்ற பெண்.இவருக்கு திமுக மாவட்ட கவுன்சிலரான செல்வகுமார் என்பருக்கும் பண ரீதியான கொடுக்கல் வாங்கலும் இது தொடர்பான முன் விரோதமும் இருந்துள்ளது. பர்னிச்சர் கடை நடத்தும் செல்வகுமார் சத்தியாவின் அழகு நிலையத்தினுள் புகுந்து அவரை அடித்து உதைக்கும் காட்சிகளை புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டது. இது திமுகவுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியது. அதிமுகவினர் மற்றும் இந்து அமைப்பினர் இது போன்ற அராஜங்களில் ஈடுபட்ட போதிலும் அவைகளை ஊடகங்கள் பெரிது படுத்துவதில்லை. ஆனால் திமுகவுக்கு பொதுவெளியில் அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்குடன் இது போன்ற காட்சிகளை ஊதிப்பெரிதாக்கும் நிலையில், திமுகவினரே செல்வகுமாரின் செயலில் அதிர்ச்சி அடைந்தனர். கட்சி தலைமை செல்வகுமாரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியும் உள்ளது. மேலும் தனது முகநூல் பக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“கழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்திலும், கழகக் கட்டுப்பாட்டினை மீறியும் பெண்மணி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய பெரம்பலூர் மாவட்டம் சேர்ந்தவர் தி.மு.கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தனிப்பட்ட பிரச்சினைகள், விருப்பு-வெறுப்புகள் இவற்றின் காரணமாக கழக உறுப்பினர்கள் அடாவடியாக செயல்படும் போக்கினை தி.மு.கழகத் தலைமை அனுமதிக்காது. ரவுடித்தனமாக செயல்படுவது, பெண்களிடம் வரம்பு மீறி நடப்பது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்வது போல செயல்படும் கழகத்தினர் யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி தண்டிக்கப்படுவார்கள். கழகத்தினர் இதனை எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும். தனி நபரை விட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்கள் கடும் நடவடிக்கைக்குள்ளாவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு பிரியாணி கடைக்குள் புகுந்து வளரசரவாக்கம் பிரமுகர் ஒருவர் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், மீண்டும் திமுக பிரமுகரால் உருவாகி உள்ள சர்ச்சை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கடிகளை உருவாக்கி உள்ளது.

கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்!

டிங்கரிங், பட்டி பார்த்து டிஜிட்டலில் வருகிறது ‘வசந்த மாளிகை’

தெலங்கானாவில் சந்திரசேகரராவுக்கு எதிராக தெலுங்குதேசம்-காங் கூட்டணி!

“பணம் கொடுப்பது வாங்குவது இரண்டுமே குற்றம்” -இபிஎஸ்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*