பெரியார் சிலையை அவமதித்தவருக்கு தர்ம அடி!

எச்.ராஜாவை மீது நடவடிக்கையாவது மயிராவது?

“ஹைக்கோர்ட்டாவது மயிராவது” -போலீசை விளாசிய எச்.ராஜா -Video!

விநாயகர் ஊர்வலம்:சிறுவர்களுக்கு கல்வீச கற்றுக்கொடுக்கும் மத வெறியர்கள்Vido

இன்று தந்தை பெரியாருக்கு 140 வது பிறந்த நாள் இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் அவரது சிலைக்கு மரியாதை செய்து வருகிறார்கள். சென்னை சிம்சனில் அமைந்திருக்கும் பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிந்து மரியாதை செய்ய குவிந்திருந்த போது , பைக்கில் வந்த ஒரு நபர் தனது இரண்டு ஷூக்களையும் கழட்டி பெரியார் சிலை மீது வைத்தார். இதைக் கண்ட அங்கு திரண்டிருந்த கட்சியினரும் தொண்டர்களும் அந்த நபரை பிடித்து அடித்து உதைக்கத் துவங்கினார்கள்.
போலீசார் விரைந்து வந்து அந்த நபரை மீட்டு காவல்நிலையம் கொண்டு சென்றனர். ஆனால் அந்த நபரை தர்ம அடி கொடுத்தவர்களிடம் இருந்து மீட்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. இச்செயலைக் கண்டித்து சென்னை அண்ணா சாலையில் மறியல் போராட்டம் நடந்தது.

#HBD_PERIYAR_140 #Periyar_140

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*