மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்பது அதிமுக கிளப்பி விட்ட வதந்தி!

18-ஆம் தேதி முதல் சபரிமலையில் பெண்கள் அனுமதி!

2,000 பேருக்கு ஆண்மை நீக்க தண்டனை : ஜெயலலிதா இருந்திருந்தால்?

பாஜகவுக்கு எதிரான டெல்லி பேரணி திமுகவும் களமிரங்கியது!

உ.பி காட்டுமிராண்டித்தனம் :ஆப்பிள் நிறுவன அதிகாரி சுட்டுக்கொலை!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருப்பதாக அதிமுக முதல்வர் உட்பட அமைச்சர்கள் ஆளும் கட்சி பிரமுகர்கள் கூறி வந்த அனைத்தும் வதந்தி என்பது தெரியவந்திருக்கிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான அனுமதியைக் கூட இதுவரை மத்திய அமைச்சரவை வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
2015-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி தமிழகத்தின் மதுரை அருகில் உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். முதல்வர் துவங்கி பல அமைச்சர்களும் எய்ம்ஸ் மருத்துவமனையின் நாயகனே என மோடியை புகழ்ந்து தள்ளினார்கள். ஆனால், இப்போது அது வெறும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிர்வாகி ஹக்கிம் என்பவர் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மத்திய சுகாதாரத்துறையிடம் பல கேள்விகளை கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இதுவரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. மேலும் தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக எந்த ஒரு நிதியும் ஒதுக்கப்படவில்லை. எந்த ஒரு நிறுவனத்திற்கும் டெண்டர் விடப்படவும் இல்லை. என்று பதிலளித்துள்ளது.
மத்திய அரசு அனுமதியெ கொடுக்காத எய்ம்ஸ் மருத்துவமனை தோப்பூரில் அமைய இருக்கிறது என அதிமுக அமைச்சர்கள் கொடுத்த பில்டப் வெறும் வதந்தி என்பது உறுதியாகிறது. சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புகிறவர்கள் கூட கைது செய்யப்படுகிறாரகள். அமையாத ஒரு மருத்துவமனையை அமைந்து விட்டதாக வதந்தி பரப்பியர்களை என்ன செய்வது?

 

#Madurai_aims #மதுரையில்_எய்ம்ஸ் #அமைச்சர்_உதயகுமார் #அமைச்சர்_விஜயபாஸ்கர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*