மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகிறார் அற்புதம்மாள்!

”20 நிமிடங்கள் வரை மல்லையா அருண்ஜெட்லியுடன் பேசினார்”- காங் குற்றச்சாட்டு

சாரிடான் உள்ளிட்ட மருந்துகளுக்கு தடை!

கேரளத்தில் மழைக்குப் பிந்தைய வறட்சிக்கு வாய்ப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எழுவரை விடுதலை செய்யும் தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருப்பதன் மூலம் இந்த பிரச்சனையை காலவரையின்றி கிடப்பில் போட்டுள்ளார் ஆளுநர்.
ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். தங்களை விடுதலை செய்யக் கோரி இவர்கள் நீண்ட காலமாக சட்டப் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இவர்கள் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து மாநில அரசு இவர்களை விடுவிக்கும் அமைச்சரவை முடிவை எடுத்து அதை ஆளுநருக்கு அனுப்பியது. கடந்த 9-ஆம் தேதி முடிவெடுத்து 11-அம தேதி அதை உடனே ஆளுநருக்கு அனுப்பிய நிலையில், மாநில அரசின் முடிவை நிறைவேற்ற வேண்டிய ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தைக் கேட்பதற்காக மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்.
உள்துறை அமைச்சகம் இந்த கோப்பை ஜனாதிபதிக்கு அனுப்பி ஆலோசனை கேட்கலாம் என்று தெரிகிறது. எழுவர் விடுதலைக்கு சட்ட ரீதியாக இருந்த தடைகள் விலகி விட்ட நிலையில் துறை ரீதியாக தாமதப்படுத்தும் நோக்கோடு எழுவர் விடுதலை முடிவை மத்திய அரசுக்கு அனுப்பியிருகிறார். ஆளுநர்.
கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் போது இந்த எழுவரில் ஆறு பேரின் தூக்கை ஆயுள் தண்டனையாக குறைத்த உச்சநீதிமன்றம் இந்த எழுவர் விடுதலை தொடர்பான முடிவை மாநில அரசே எடுக்கலாம் என்று உத்தரவிட்டது. அரசியல் சாசானம் 161 வழங்கியுள்ள உரிமைகளின் படி மாநில அரசு முடிவெடுத்து ஆளுநருக்கு அதை அனுப்பி ஒப்புதல் பெற்று விடுதலை செய்ய வேண்டிய நிலையில், அதைச் செய்யாமல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு “மூன்றே நாட்களில் முடிவைச் சொல்லுங்கள் அல்லது நானே விடுவிப்பேன்” என்று கெடு விதித்தார். விளைவு மாநில அரசுக்கு பதில் ஒன்றை எழுதாத மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மாநில அரசின் முடிவுக்கு தடை பெற்றது. அரசியல் சட்டம் 432 -ல் இருக்கும் உரிமைகளைச் சுட்டிக்காட்டியே மத்திய அரசு தடை பெற்றது. இதில் சட்ட ரீதியாக இருக்கும் குழப்பங்கள் களையப்பட வேண்டும் என்றுதான் நீதிபதி சதாசிவம் அதை ஐந்து பேர் அடங்கிய அமர்வுக்கு மாற்றினார். இப்போது ஜெயலலிதா மறைந்து விட்ட நிலையில், சட்ட ரீதியாக இருந்த குழப்பங்கள் தெளிவாகி விட்ட நிலையில், விடுதலை முடிவை ஆளுநருக்கு அனுப்பி அழுத்தம் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டிய மாநில அரசு தயங்கி நிற்கிறது. பலவீனமான அரசால் எதையும் சாதிக்க முடியாது என்பது போல எழுவர் விடுதலையில் மீண்டும் மீண்டும் அற்புதம்மாளை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது ஆளும் அதிமுக அரசு.
ஆனால், ராஜீவ் காந்தி கொலையால் அதிக ஆதாயம் அடைந்தது அதிமுகதான்.

#Arputhammaal @ezuvarviduthalai #Perarivalan #murugan

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*