மெகுல் சோக்‌ஷி இந்தியா கொண்டு வரப்படுவாரா?

“உண்மையோ பொய்யோ எதையாவது வைரலாக்குங்கள்” -பாஜக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட அமித்ஷா!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,400 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து விட்டு நாட்டை விட்டு தப்பியோடிய குஜராத் வைர வியாபாரிகள் நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்‌ஷி ஆகியோரை  விசாரணைக்காக  நாட்டிற்கு கொண்டு வருமா பாஜக அரசு என்ற கேள்வி எழுந்துள்ளது.

பத்திரமாக நாட்டை விட்டு வெளியேறி கரீபியன் தீவு நாடுகளுள் ஒன்றான ஆன்டிகுவா தீவுகளில் முதலீடு செய்து தொழிலதிபர் என்னும் அந்தஸ்தோடு வாழும் இந்த மோசடி மன்னன் அந்நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளார். பாஜக அரசின் ஆதரவோடுதான் இவர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இப்போது இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது மத்திய அரசு.

இப்போது வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு ஆன்டிகுவா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் செட் கிரீனியைச் சந்தித்து சுஷ்மா பேசினார். அப்போது மெகுல் சோக்‌ஷியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கோரியதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.மெகுல் சோக்‌ஷியை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் இந்தியாவில் மோசடி செய்து விட்டு ஓடிய மெகுல் சோக்‌ஷியை ஆன்டிகுவா நாட்டு சட்டங்களுக்கு அமைய இந்தியாவில் நடத்த வேண்டும் என்பது கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு அங்கம். தவிறவும் இரு நாடுகளுக்கு இடையே கைதிகளை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றால் இரு நாடுகளும் அதற்கான ஒப்பந்தங்களை கைச்சாத்திட வேண்டும் இந்தியாவுக்கு ஆன் டிகுவாக்கும் இடையில் அப்படி ஒரு ஒப்பந்தம் இல்லை என்பதால் மெகுல் சோக்‌ஷியை இந்தியாவிடம் அந்நாடு ஒப்படைக்குமா என்பது கேள்விக்குறிதான். என்றாலும் சுஷ்மா செக் கிரீனியைச் சந்தித்தது தொடர்பாகவும்,மெகுல் சோக்‌ஷியை ஒப்படைப்பது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் களமிறங்குகிறார் விஷால்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*