ரஃபேல் விமான ஊழல்: மோடிக்கு உருவாகும் சர்வதேச நெருக்கடி!

திருமுருகன் மீது உஃபா :தெரியாமல் தேதி போட்ட போலீஸ்!

தமிழகத்தில்: கதற கதற ஆபரேஷன் செய்த துப்புரவு ஊழியர்!Video

ஸ்மாட் நகரம் அமைச்சர் வேலுமணியின் பினாமிக்கு டெண்டர்

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் ரக போர் விமானங்களை கொள்வனவு செய்ததில் மோடி அரசு மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கையில் எடுத்திருக்கும் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.
கடந்த 2016-ஜனவரி மாதம் பிரான்ஸ் நாட்டில் இருந்து 59 ஆயிரம் கோடி அளவிலான 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொள்வனவு செய்ததை விட அதிக தொகை கொடுத்து விமானங்களை வாங்குவதாக காங்கிரஸ் குற்றம் சுமத்தி பெருமளவு ஊழல் நடந்திருக்கிறது என நாடாளுமன்றத்திலேயே காங்கிரஸ் குற்றம் சுமத்தியது.
அரசு நிறுவனமன ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் நீக்கப்பட்டு ரிலையன்ஸ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் சேர்க்கப்பட்ட உண்மையை காங்கிரஸ் வெளியில் கொண்டு வந்துள்ளது.விமானக் கொள்முதலில் எந்த விதமான முன் அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் பிரான்ஸ் அரசுடன் கையொப்பம் ஆவதற்கு 12 நாட்கள் முன்புதான் “ரிலையன்ஸ் டிபென்ஸ்’ என்னும் நிறுவனமே துவங்கப்பட்டுள்ளது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் நடைபெற்ற பொது பிரான்ஸ் அதிபர் ஹெலாண்டேவின் காதலியை வைத்து ரிலையன்ஸ் நிறுவனம் படம் தயாரிக்க ஒப்பந்தம் செய்து கொண்ட செய்தியை ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார். இந்த விவகாரம் பிரான்ஸ் நாட்டில் பூதாகரமாக வெடிக்க இருக்கிறது. இதில் இந்தியாவை ஆளும் பாஜக அரசும், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானியும் பெரிய சர்ச்சைக்குள் சிக்க இருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தை உலக அளவில் முக்கியமான விஷயமாக காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்த்தேசிய அரசியல் உக்கிரமாக காத்துக் கிடக்கிறது:ராஜ்தேவ்

‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படம் பற்றிய பகிர்வுத் தொகுப்பு

#Rafale_deal #ரஃபேல்_போர்விமான_கொள்முதல் #இந்தியாவில்_முதல்_பெரிய_ஊழல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*