”20 நிமிடங்கள் வரை மல்லையா அருண்ஜெட்லியுடன் பேசினார்”- காங் குற்றச்சாட்டு!

கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்!

டிங்கரிங், பட்டி பார்த்து டிஜிட்டலில் வருகிறது ‘வசந்த மாளிகை’

தெலங்கானாவில் சந்திரசேகரராவுக்கு எதிராக தெலுங்குதேசம்-காங் கூட்டணி!

“பணம் கொடுப்பது வாங்குவது இரண்டுமே குற்றம்” -இபிஎஸ்!

நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு  மல்லையாவும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் 20 நிமிடங்கள் வரை பேசிக் கொண்டிருந்தார்கள் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

9,000 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய பொதுத்துறை வங்கிகளில் மோசடி செய்து விட்டு லண்டனுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்தக் கோரி இந்தியா தொடர்ந்த வழக்கில் லண்டன் நீதிமன்றம் டிசம்பர் 10-ஆம் தேதி தீர்ப்பு வழங்க இருக்கிறது. இந்நிலையில், நேற்று நீதிமன்றத்திற்கு வந்த விஜய் மல்லையா “நான் இந்தியாவில் இருந்து கிளம்புவதற்கு முன்பு நிதியமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து பேசி விட்டுத்தான் வந்தேன்” என்று கூறியது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது. மல்லையாவின் இந்த  வாக்குமூலத்தை நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறுத்தாலும் மல்லையா பாராளுமன்றத்தில் வைத்து சந்தித்தேன் என்று மறுபடியும் கூறினார். இந்நிலையில், மல்லையா இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு பாராளுமன்ற மத்திய அரங்கில் வைத்து அருண் ஜெட்லியும், மல்லையாவும் 15 முதல் இருபது நிமிடங்கள் வரை இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். என்று காங்கிரஸ் எம்.பி புனியா பகிரங்கமாக குற்றம் சுமத்தினார். மேலும் பாராளுமன்ற சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வெளியிட்டால் இது தொடர்பான உண்மைகள் வெளிவரும் என்றும் கூறியுள்ளார்.

#vijaymallya_Arunjaitley #VijayMallya #ArunJaitleyStepDown #RahulMallyaLootedIndia

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*