லாலுவைக் கவிழ்த்த நிதிஷ் குமாரை கைவிட்டது பாஜக!

திருமுருகன் மீது உஃபா :தெரியாமல் தேதி போட்ட போலீஸ்!

மெர்சலை மிஞ்சும் விஜய்யின் சர்கார்!

தமிழகத்தில்: கதற கதற ஆபரேஷன் செய்த துப்புரவு ஊழியர்!Video

லாலு பிரசாத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவோடு கை கோர்த்த ஐக்கிய ஜன தளத்தின் தலைவர் நிதிஷ்குமாரை பாஜகவும் கைவிட்டு விட்டதாகவும், விரைவில் இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி உடையும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

பீகார் மாநிலத்தில் பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க ராஷ்டிரிய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி வைத்து வென்றார். நிதிஷ்குமாரை முதல்வராக்கிய லாலுபிரசாத் அமைச்சரவையில் லாலுவின் மகன் துணை முதல்வர் பொருப்பில் இருந்தார். இக்கூட்டணியை உடைக்க பாஜக முயன்று அதில் வெற்றியும் பெற்றது.

லாலுபிரசாத் யாதவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுடன் கைகோர்த்த நிதிஷ்குமார் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். இந்நிலையில், 2019 நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிப்பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் கூர்மையடைந்து செல்கிறது.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் போது ஐக்கிய ஜனதா தளம் வாக்கெடுப்பை ஆதரிக்கும் இல்லை, எதிர்க்கவும் இல்லை என்ற நிலை எடுத்தது. பாஜகவுடன் கூட்டணியில் என்று சொல்லும் அதிமுக பாஜகவை ஆதரித்து வாக்களித்த நிலையில், வெளிப்படையாக கூட்டணி வைத்த நிதிஷ்குமார் ஆதரித்து வாக்களிக்கவில்லை. இந்நிலையில், பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் 22  தொகுதிகளை பாஜக தன் வசம் வைத்துள்ளது. வரவிருக்கும் தேர்தலில் கூடுதலாக சில தொகுதிகளில் போட்டியிட விரும்பும் பாஜக, ஐக்கிய ஜனதா தளத்திற்கு 10 தொகுதிகளை கொடுப்போம் என்கிறது. ஆனால் ஐக்கிய ஜனதா தள தலைவர்களோ ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் தலா 17 தொகுதிகளில் போட்டியிடுவோம். மீதி தொகுதிகளை லோக் ஜனசக்தி, உள்ளிட்ட கட்சிகளுக்குக் கொடுப்போம்”என்கிறார்கள்.

இதை பாஜக ஏற்கவில்லை. சமீபத்திய தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்து வருவது நிதிஷ்குமாரை சிந்திக்க வைத்திருக்கிறது.இந்த கூட்டணியில் நீடித்தால் மக்கள் வாக்களிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படி யோசனையில் இருந்த நிலையில், தொகுதி பங்கீடு பூதாகரமாக கிளம்பியுள்ள நிலையில் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் விட்டுக் கொடுத்து செல்ல தயாராக இல்லை.  “எங்கள் கோரிக்கையை பாஜக ஏற்கவேண்டும் இல்லாவிட்டால் எங்களுக்கு ஒரு இழப்பும் இல்லை” என்று பாஜகவுக்கு போக்குக் காட்டுகிறார் நிதிஷ்.

தன்னை கழட்டி விட்டு விட்டு பாஜகவுடன் ஓடிய நிதிஷ்குமார். இப்போது பொறியில் சிக்கிய எலி போல திணறிக் கொண்டிருப்பதை சத்தமில்லாமல் ரசித்துக் கொண்டிருக்கிறார் லாலுவும் அவரது மகனும்!

விஜயகாந்த் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*