விண்ணை முட்டும் பெட்ரோல் விலை- நிதி ஆயோக் அளித்த பதில் இதுதான்!

தமிழிசைக்கு ஆதரவா :ஓவியா பதில்!

பாஜக எம்.பி தருண் விஜய்க்கும் அட்மின் பிரச்சனை!

பெட்ரோல், டீசல் விலைஉயர்வு தொடர்பாக பதிலளிக்க வேண்டிய அவசியல் இல்லை என்று நிதி அயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் , டீசல் விலை உயர்வு அதிர்ச்சியளிக்கும் வகையில் உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்றும் பெட்ரோல் விலை 21 காசுகள் அதிகரித்து ரூபாய் 82.62 பைசாவுக்கு பெட்ரோல் விற்கப்படுகிறது. டீசல் விலை 75.61 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆட்டோ, லாறிகள் போன்ற வாகனங்களின் சேவைக்கடணம் அதிகரித்துள்ளதால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். பெட்ரோல் விலை உயர்வால் காய்கறிகள் விலையும் மிக மோசமான முறையில் உயர்ந்துள்ளது.ஹோட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலையும் உயர்ந்துள்ளது.பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு “பெட்ரோல் விலையை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை” என்று கூறி விட்டது.
இந்நிலையில், நிதி அயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார், “குறிப்பிட்ட காலங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாறும், எனவே சர்வதேச சந்தையைப் பொருத்து அத்தியாவசிய பொருட்களின் விலை மாறுகிறது.அதனால், இதற்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியம் இலலி. சர்வதேச சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களுக்காக மத்திய அரசின் கொள்கைகளை மாற்றிக் கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.

#பெட்ரோல்_விலை_உயர்வு #பெட்ரோல்_டீசல்_விலை #நிதிஆயோக் #Nithi_ayok

தோழர் ஓவியா தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்!

தெறிக்க விட்ட ஷோபியா: பாஜக பணிந்தது எப்படி?

சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்!

சோபியாவுக்கு பெருகும் ஆதரவு :டிரெண்டிங் ஆகும் பாஜக ஒழிக

ஸ்டெர்லைட் பற்றி மார்ச் மாதம் சோஃபியா எழுதிய கட்டுரை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*