விநாயகர் ஊர்வலம்:சிறுவர்களுக்கு கல்வீச கற்றுக்கொடுக்கும் மத வெறியர்கள்Vido

“ஹைக்கோர்ட்டாவது மயிராவது” -போலீசை விளாசிய எச்.ராஜா -Video!

பெரும்பான்மை இந்துக்களால் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகளுள் ஒன்று விநாகர் ஊர்வலம். தமிழகத்தில் 80-பதுகளில் இருந்து இந்து அமைப்புகளால் அரசியல் காரணங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட இந்த  விநாயகர் ஊர்வலங்கள் பெருமளவு வன்முறை கலவர ஊர்வலங்களாக மாறிக் கொண்டிருக்கிறது.

இந்துக்கள்  தாங்களில் பல்வேறு கடவுகள்களை பக்தியோடு வழிபட்டு. ஆன்மீக உணர்வை  வெளிப்படுத்துவதோடு மத வேறுபாடின்றி உணவு, பலகாரங்களையும் வழங்கி கொண்டாடுவார்கள். விநாயகர் விழாவும் அப்படியான ஒன்றுதான். பெரும்பலான இந்துக்கள் கடவுளுக்காக அலகு குத்துவது, நோன்பு இருப்பது என தங்களை வருத்துக் கொண்டு கடவுளை வழிபாடுவார்கள். ஆனல் இந்து  மத அமைப்புகளால் நடத்தப்ப்டும் விநாயகர் ஊர்வலங்கள் கடவுளுக்காக இந்துக்கள் அல்லாத மக்களை துன்புறுத்தும் ஊர்வலங்களாக மாறி வருகிறது.

தென்காசியில் விநாயகர் ஊர்வலம் ஒன்றில் சின்னஞ்சிறிய பொடியன்  ஒருவன் முதலில் தயங்கி தயங்கி கல்லை வீச யோசிக்கிறார். அவனது தயகத்தைக் கண்ட ஒரு இளம் வயதுடைய இந்து வெறியர் அவனை கற்களை வீசுமாறு பயிற்சி கொடுப்பதும் இந்த விடியோவில் பதிவாகி இருக்கிறது. பக்தி என்ற பெயரில் இந்த குழந்தைகள் வன்முறையில் பக்கம் திருப்பி விடப்படுவதும். இவர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாவது  பற்றியும் பெற்றோருக்கு என்ன மாதிரியான கவலைகள் இருக்கும்!

#vinayagar_oorvalam #விநாயகர்-சிலை_ஊர்வலம் #தென்காசி-வன்முறைகள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*