வைக்கம் விஜயலட்சுமிக்கு டும்…டும்..டும்!

The Nun விமர்சனம் – பிரபு தர்மராஜ்

எழுவர் விடுதலை – கவர்னருக்கு எந்த வேலையும் கிடையாது :கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

எழுவர் விடுதலை :ஆளுநர் நிரகரிப்பார் -சு.சாமி!

எழுவர் விடுதலை :”அரசியல் செய்ய வேண்டாம்” -அற்புதம்மாள்!

காற்றே காற்றே என்ற மலையாளப்பாடல் மூலம் மனம் கவர்ந்தவர் வைக்கம் விஜயலட்சுமி. கண் பார்வை குறைபாடுள்ள விஜயலட்சுமி குறுகிய காலத்தில் தன் தனித்துவமான குரலால் புகழ் பெற்றார். இடையில் தன் காண்பார்வையை சரி செய்து கொள்ளும் முயற்ச்சியிலும் இருந்த வைக்கம் விஜயலட்சுமிக்கு ஒரு திருமணமும் தள்ளிப்போன நிலையில், வருகிற அக்டோபர் 22-ஆம் தேதி வைக்கம் மகாதேவ் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற இருக்கிறது.
கேரளத்தைச் சேர்ந்த இண்டீரியர் டெக்கரேஷன் காண்டிராக்டரான அனூப் என்பவரின் கரம் பிடிக்கப் போகும் விஜயலட்சுமிக்கும் அனூபிற்கும் இன்று (10-09-2018) அன்று வைக்கம் இல்லத்தில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. அனூப் காண்டிராக்டர் மட்டுமல்ல ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்டும் கூட, மேடை நிகழ்ச்சிகளில் இரு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட நட்பு காதலாகி ஒருவரை ஒருவர் புரிந்து இந்த திருமண முடிவை எடுத்தோம் என்கிறார் விஜயலட்சுமி.
திருமண நாளன்று இருவரும் இணைந்து மிமிக்ரி, கச்சேரி நடத்த இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இசையிலும், கலையிலும் இணைந்த உள்ளங்கள் நீடூடி வாழட்டும். நீங்களும் வாழ்த்துக்கள்!

#vaikom_vijayalaksmi #kaattre_kattre #வைக்கம்_விஜயலட்சுமிக்கு_திருமணம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*