“ஹைக்கோர்ட்டாவது மயிராவது” -போலீசை விளாசிய எச்.ராஜா -Video!

போலீசாருடன் விவாதத்தில் ஈடுபட்ட பாஜக தேசிய தலைவர்களுள் ஒருவரான எச்.ராஜா உயர்நீதிமன்றத்தை அவதிக்கும் நோக்கில் போலீசிடம் சவால் விட்டதோடு, தமிழக காவல்துறையையும் இழிவுபடுத்தி சவால் விட்டார். வழக்கம் போல பாஜவின் அடிமை அரசான எடப்பாடி பழனிசாமி நிர்வாகத்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க முடியுமா இப்படியே இந்நிலை தொடர்ந்தால் எச்.ராஜா என்ன எல்லாம் பேசுவார் என்ற விவாதமும் எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல தலைமையேற்கச் சென்ற பாஜக தலைவர் எச்.ராஜா தடை செய்யப்பட்ட இடங்கள் வழியாக ஊர்வலம் செல்ல முயன்ற போது உயர்நீதிமன்றத்தின் தடை இருப்பதாக போலீசார் அதை தடுத்த போது எச்.ராஜா, ஹைகோர்ட்டாவது மயிராவது என்று போலீசை நோக்கி ஏகத்திற்கும் பேசியதோடு. போலீசையும் ஏகத்திற்கு விமர்சனம் செய்தார். இதனைத் தொடர்ந்து போலீசாரின் தடையையும் மீரி எச்.ராஜா தலைமையில் விநாயகர் ஊர்வலம் நடந்தது போலீசார் இதை வேடிக்கை பார்த்தனர்.

#H_Raja BJP NATIONAL SECRETARY #HRAJA #எச்_ராஜா #விநாயகர்-சிலை_ஊர்வலம்

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*