18-ஆம் தேதி முதல் சபரிமலையில் பெண்கள் அனுமதி!

2,000 பேருக்கு ஆண்மை நீக்க தண்டனை : ஜெயலலிதா இருந்திருந்தால்?

பாஜகவுக்கு எதிரான டெல்லி பேரணி திமுகவும் களமிரங்கியது!

உ.பி காட்டுமிராண்டித்தனம் :ஆப்பிள் நிறுவன அதிகாரி சுட்டுக்கொலை!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 18-ஆம் தேதி முதல் வழிபாட்டிற்காக பெண்களை அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். அவர்களுக்கு அனுமதியளிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி முதல்வருடன் தேவஸ்தானம் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
சபரிமலை கோவிலில் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை இந்து மத பெரியவர்கள் எதிர்த்த போதிலும் கேரள அரசு இத்தீர்ப்பை வரவேற்பு தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய பொருப்பு கேரள அரசுக்கும் சபரிமலை தேவஸம் போர்டுக்கும் இருக்கும் நிலையில், தேவஸ்தான துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இது பற்றி கூறும் போது:-
“உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்த வேண்டிய பொருப்பும் அங்கு வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் தேவஸ்தானம் போர்ட்டின் பொருப்பு” என்றார். தேவஸம் போர்டு தலைவர் கே.பத்மகுமார் “உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்த வேண்டிய பொருப்பு தங்களுக்கு இருப்பதாக ”தெரிவித்தார். இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக அடுத்த மாதம் 17-ஆம் தேதி புதன் கிழமை சபரி மலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. 22-ஆம் தேதிகள் வரை இந்த பூஜைகள் நடக்கும். வருகிற 3-ஆம் தேதி திருவிதாங்கூர் தேவஸ்தான போர்ட் ஆலோசனைக்கூட்டத்தில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும். 18-ஆம் தேதி முதல் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பாக தேவஸம்போர்ட் தலைவர் கே.பத்மகுமார் இன்று முதல்வர் பினராயி விஜயனை சந்தித்துப் பேசுகிறார். பெண்களை அனுமதிப்பது அவர்களுக்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.

சபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநிலம் தழுவிய பந்த்!

திருமுருகன் உயிருக்கு ஆபத்து?

‘பரியேறும் பெருமாள் ‘ குறைவான காட்சிகள்தான்-மக்களிடம் பெருகும் ஆதரவு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*