2,000 பேருக்கு ஆண்மை நீக்க தண்டனை : ஜெயலலிதா இருந்திருந்தால்?

பாஜகவுக்கு எதிரான டெல்லி பேரணி திமுகவும் களமிரங்கியது!

உ.பி காட்டுமிராண்டித்தனம் :ஆப்பிள் நிறுவன அதிகாரி சுட்டுக்கொலை!

சபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநிலம் தழுவிய பந்த்!

திருமுருகன் உயிருக்கு ஆபத்து?

‘பரியேறும் பெருமாள் ‘ குறைவான காட்சிகள்தான்-மக்களிடம் பெருகும் ஆதரவு!

கஜகஸ்தான் நாட்டில் சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் புரிந்து தண்டனைக்கு உள்ளான 2,000 பேருக்கு ஆண்மை நீக்க மருந்தின் மூலம் தண்டனை வழங்கும் முயற்சியை அநாட்டு அரசு செயல்படுத்த இருக்கிறது.
சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த கஜகஸ்தான் நாட்டில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகின. அதனால் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் சட்டத்தை அந்த அரசு இயற்ரியது. இச்சட்டத்திர்கு கஜஸ்தான் அரசு ஒப்புதலும் வழங்கியது.
இளம் வயதினர் மீது பிரயோகிப்படும் பாலியல் குற்றங்களுக்கு அந்நாட்டில் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை,2010 முதல் 2014 வரையான நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,000 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோக வழக்குகள் கஜகஸ்தான் நாட்டில் பதிவாகியுள்ளது என்பதால் ஆண்மை நீக்க தண்டனையை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.
இதற்காக இரண்டு மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ள அந்த நாட்டு அரசு. சைப்ரொடெரோன் (Cyproterone) என்ற மருந்தை சில வார இடைவெளிகளில் குற்றவாளிகளுக்கு அளித்தால் அவர்களுக்கு பாலியல் உணர்வே இல்லாமல் போய் விடும். அவர்களது ஆண் உறுப்பு உடலுறவு கொள்ள தகுதி அற்ற ஒன்றாக மாறி விடும். ஆனால், இந்த மருந்தை தண்டனையாகச் செலுத்த சர்வதேச அளவில் சுகாதார அமைப்புகளின் அனுமதி வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், குழந்தைகள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையால் இந்தியாவிலும் பெண்கள் மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள்.
மும்பையில் நிர்பயா பாலியல் வன்முறைக்குள்ளானது உலக அளவில் அதிர்வலைகளை உருவாக்கிய போது அப்போதைய தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் “கெமிக்கல் முறையில் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகிறவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை விடுத்திருந்தார். இதே கோரிக்கையை அப்போதைய தேசிய மகளிர் ஆணைய தலைவி மம்தா ஷர்மாவும் எழுப்பியிருந்தார். கஜகஸ்தான் நாட்டு கெமிக்கல் ஆண்மை நீக்கம் அமலாகியிருக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் உயிரோடு இருந்திருந்தால் அதை இந்தியாவுக்கும் ஒரு முறை நினைவூட்டியிருப்பார்.

#ஆண்மைநீக்கம் #பாலியல்வன்முறைகள் #சிறுமிகள்-துஷ்பிரயோகம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*