அடியபணியமாட்டோம் சபரிமலையில் பெண்களை அனுமதிப்போம்- பினராயி விஜயன்!

#Rafale_scam ரிலையன்ஸ்சுக்காக பிரான்ஸ் அரசை நிர்பந்தித்த மோடி அரசு!

கர்நாடக சங்கீத உலகில் #metoo -லலித்ராம்

இயேசுவின் உடல் களவாடப்பட்டதா? #Risen -ராஜ்தேவ்

“சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என கேரளத்தில் இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில். அரசியல் லாபங்களுக்காக பிரச்சனையை ஏற்படுத்துகிறவர்களுக்கு அரசு அடிபணியாது. சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கும் முடிவில் இருந்து அரசு பின்வாங்காது” என்று கூறியுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
சபரிமலையில் 10 முதல் ஐம்பது வயது வரையுள்ள பெண்களை அனுமதிக்க முடியாது என சபரிமலை தாத்ரிகளும், பந்தள மகாராஜா குடும்பமும் அனுமதி மறுத்து வந்தது. ஆனால், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் வலியுறுத்தின. ஆனால், கேரள அரசு மேல் முறையீடு செய்ய மாட்டோம் என அறிவித்தது.

கேரள அரசின் இந்த முடிவுக்கு எதிராக பாஜகவினரும் இந்து அமைப்புகளும் பெண்களை திரட்டி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இன்னொரு பக்கம் தேசிய ஐய்யப்ப பக்தர்கள் சபா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவும் இதில் அமைதியாக இருக்கிறது. டெல்லியில் ஆள்கிறவர்கள் அமைதியாக இருந்து விட்டு கேரளத்தில் பாஜக இந்து அமைப்புகளை கேரள மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக தூண்டி வரும் நிலையில், திருவனந்தபுரத்தில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன்:-
“சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது. அய்யப்பன் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்தும் உரிமை தொடர்பான விவகாரத்தில் அரசியல் லாபங்களுக்காக பிரச்சனைகளை உருவாக்குகிறவர்களுக்கு அரசு அடிபணியாது.

#Sabarimala #SupremeCourt #பெண்வழிபாடு #சபரிமலையில்_பெண்கள்

வேளச்சேரி ஏரிக்கரை உமா : ஆயிரத்தில் ஒருத்தி!!

நக்கீரன் கோபால் கைது – அவமானப்பட்டது ஆளுநரா அல்லது அட்மினா?

அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்? #Nakeeran_Leaks

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*