அந்த சிரிப்புக்கு அர்த்தம் என்ன?

திராவிட இயக்கமும் மீனாட்சி தாயாரும்!

ஸ்டெர்லைட் போராட்டம்: 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்த போது முகம் கொள்ளா சிரிப்போடு இருந்தார் மோடி. வழக்கமாக கடுமை காட்டி போஸ் கொடுக்கும் மோடி தாரளமாகவே சிரித்தபடி இருந்தது இந்திய அளவில் ஊடகங்களைக் கவர்ந்துள்ளது. ஆனால் அந்த சிரிப்புக்குப் பின்னால் ஒரு இயக்கத்தை அடகு வைக்கும் பேரம் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.
ஜெயலலிதா மரணத்தின் பின்னர் அதிமுகவை தங்கள் கட்டுக்குள் பாஜக கொண்டு வந்தாலும் அதை அதிமுகவினர் மறுத்தே வந்தார்கள். ஆனால், அடுத்தடுத்து நடந்த ரெய்டுகளும் மிரட்டல்களும் முதல்வர் முதல் அமைச்சர்களையும் பாஜகவிடம் அடிபணிய வைத்தது. அது எந்த அளவுக்கு என்றால் எஸ்.வி.சேகரையோ, எச்.ராஜாவையோ கைது செய்ய முடியவில்லை. உச்சக்கட்டமாக உயர்நீதிமன்றம் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அபகரித்த நிலத்தைக் கூட கெடு விதித்தும் அரசால் கைப்பற்ற முடியவில்லை. ஆளுநரும், தலைமைச் செயலாளரும் சாஸ்தாவின் பின்னால் இருக்கிறார்கள். என்பதால் அரசு சாஸ்தா முன்னால் பம்முகிறது. இப்படி ஒரு அரசின் சீரழிந்த நிர்வாகத்திறனோடு ஊழலில் ஊறித்திளைக்கும் ஒருவரை ஊழலுக்கு எதிராகவே போராடுகிறேன் என்று சொல்லும் மோடி எப்படி சிரித்தபடி முகம் காட்டுகிறார் என்ற கேள்வியும் எழுந்தது.
ஈழப்படுகொலைகள் தொடர்பாக அதிமுக நடத்திய சேலம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி “பாஜகவுடன் கூட்டணி இல்லை” என்றார். ஆனாலும் அவ்வப்போது அதிமுக அமைச்சர்கள் மோடியை புகழ்ந்தும், எச்.ராஜாவை புகழ்ந்தும் பேசி வந்தார்கள். திராவிட இயக்க அரசியல் பிடிப்புள்ள அதிமுக எம்.பி தம்பிதுரை “பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. தனித்து நின்று வெல்வோம்” என்று பேசினார். ஆனால். அதன் பின்னர் தம்பிதுரைக்கு எச்சரிக்கை போனதாகவும். எடப்பாடியை டெல்லிக்கு அழைக்கும் முன்பே உரிய முறையில் எடுத்துச் சொல்லித்தான் அழைத்ததாகவும் கூறுகிறார்கள்.

 

இந்த இரு செய்திகளையும் வாசியுங்கள்

வீரப்பனைக் காட்டிக் கொடுத்த பெண்ணின் இப்போதைய நிலை?

தமிழகத்தில் தினகரனை தவிர்த்து தேர்தல் கருத்துக்கணிப்பு சாத்தியமா?

 

விரைவில் அமித்ஷா தமிழகம் வர இருக்கிறார். ஏற்கனவே மோடியின் தம்பி வந்து அதிமுக தலைமையின் பல்ஸ் பார்த்துச் சென்றார். இப்போது எல்லாம் ஓகே அதிமுகவில் உள்ள சிறுபான்மையினரை எப்படி சமாளிப்பது என்பது பற்றியும் அதிமுகவுக்கு வாக்களிக்கப் போகும் சிறுபான்மை மக்களை எப்படி சமாளித்து பாஜக கூட்டணிக்குள் கொண்டு வருவது பற்றியும் எடப்பாடி பழனிசாமி தன் சகாக்களிடம் ஆலோசித்ததாக கூறுகிறார்கள்.
இப்போதைக்கு அதெல்லாம் வேண்டாம் அதிமுகவை இன்னும் ஓராண்டுக்கு மட்டும் அமித்ஷாவிடம் ஒப்படையுங்கள் அவர் பார்த்துக் கொள்வார். அவர் என்ன சொல்கிறாரோ அது படி நீங்கள் கட்சியை நடத்தினால் போதும் என்பதுதான் இப்போதைக்கு கட்டளை. அந்த கட்டளையை சாசனமாக ஏற்று டெல்லி சென்றவருக்குத்தான் இந்த புன்னகை பரிசு!
இதுவரை பாஜக கூட்டணியை மறுத்து வந்த எடப்பாடி பழனிசாமி பிரதமர் சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய போது “தேர்தல் வரட்டும் முடிவு செய்து சொல்கிறோம்” என்றார் அதுதான் அமித்ஷா ஆட்டம்.

 

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம் இது!

குஜராத்தில் இருந்து வெளியேறும் வட மாநிலத்தவர்கள்!

அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்!

பழனிசாமிக்கு மோடி போட இருக்கும் ஐந்து கட்டளைகள்?

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*