அனைத்து மத மக்களையும் ஏற்பதுதான் அய்யப்பன் மரபு -பினராயி விஜயன்!

“நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்

காங்கிரஸில் இணைந்த பாஜக தலைவர் ராஜஸ்தானில் பின்னடைவு!

கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்!

கேரள மாநிலத்தின் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்துப் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று பாஜக,ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதுவரை முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் எதிரிகளாக சித்தரித்து அரசியல் செய்த இவர்கள் இப்போது இந்துப் பெண்களை எதிரிகளாக்கி உள்ளார்கள். சபரிமலை கோவிலுக்கு வழிபடச் செல்லும் பெண்கள் மீது கொடூரமாக தாக்குதலை நடத்தும் இவர்கள் கேரள மாநிலத்தையே கலவர பூமியாக்கி விட்டார்கள்.
சபரிமலையில் ஆண் பெண்கள் என பாகுபாடின்றி வழிபடலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல் படுத்த இடது சாரி முயலும் நிலையில் மத்தியில் ஆளும் பாஜகவோ எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியோ இது பற்றி மவுனம் சாதிக்கிறது. ஆனால், கேரள மாநிலத்தில் இவ்விரு கட்சிகளுமே பெண்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:-
“பிற இந்துக்கோவில்களுக்கு இல்லாத தனித்தன்மை சபரிமலை கோவிலுக்கு உள்ளது. அனைத்து மதத்தினரையும் இந்த கோவில் உள்ளே அனுமதிக்கிறது.அதுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பிரச்சனையாக உள்ளது. அதை அழிக்கவே அந்த அமைப்பு முயல்கிறது.ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்தான் மக்கள் மீது ஜாதி வெறியுடன் தாக்குதல் நடத்துகிறார்கள்”என்று ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சபரிமலைக்குள் நுழைய முயன்ற நியூயார்க் டைம்ஸ் இதழில் இந்திய நிருபர் சுகாசினி ராஜ் மீது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும், பாஜகவினரும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல தயாராக இருந்த போதிலும் அவர் மேற்கொண்டு செல்ல மறுத்து விட்டார். போலீசாருக்கு நன்றி தெரிவித்த அவர் சிகிச்சைப்பின்னர் கொச்சி நகரத்திற்குச் சென்றார்.

#Pinarayi_Vijayan #சபரிமலை #sabarimala  

கச்சா எண்ணெய் :மோடியின் கோரிக்கையை நிராகரித்த நாடுகள்!

தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*