அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு!

Dr. Denis Mukwege, from the Democratic Republic of Congo, left, in 2014 and Yazidi woman from Iraq, Nadia Murad in 2016 as they both address the European parliament in Strasbourg, France. The pair won the 2018 Nobel Peace Prize  for their work to highlight and eliminate the use of sexual violence as a weapon of war

கன மழைக்கு வாய்ப்பில்லை – ’தமிழ்நாடு வெதர் மேன்’

என்ன ஆனது கேரளப் பெண்களுக்கு?

பெண்களுக்கு எதிர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு கை கோர்த்த காங்கிரஸ்!

பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க பரிந்துரைக்கப் போகிறேன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை அறிவித்த நிலையில், பலரும் முகநூல் உள்ளிட்ட வலைத்தளங்களில் இது குறித்து கருத்து வெளியிட்டு வந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு டெனிஸ் முக்வேஜா, மற்றும் நாடியா முராத் ஆகிய இருவருக்கும் அந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசை நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. காங்கோ நாட்டைச் சேர்ந்த மருத்துவர் டெனிஸ் முக்வேஜாவுக்கும் ஈராக் நாட்டைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் நாடியா முராத்திற்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கோ மருத்துவர் டெனிஸ் முக்வேஜா காங்கோ குடியரசில் பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பணி செய்தவர். பாலியல் துன்புறுத்தல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளான பெண்களுக்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்து அவர்களுக்கு மறுவாழ்வை உருவாக்கிக் கொடுப்பதில் பெரும் பங்காற்றியவர் டெனிஸ் முக்வேஜா. தனது மருத்துவச் சேவையை பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்களுக்காகவே சேவையாக செய்தவர் டெனிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடியா முராத்
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். திவீரவாதிகளிடமிருந்து உயிர்தப்பிய சமூக சேவகர். 2014-ஆம் ஆண்டு ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தன் கொடுங்கரங்களை விஸ்தரித்த போது அதில் யசிதி இன சிறுபான்மை மக்கள் அவர்களிடம் சிக்கிக் கொண்டார்கள். யசிதி பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்திய ஐ. எஸ். அமைப்பினர் அவர்களை சந்தைகளிலும் விற்பனை செய்தனர்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் நாடியா முராத்தின் 6 சகோதரர்களும் கொல்லப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து தப்பி ஐ.எஸ். பயங்கரவாதிகள் பெண்களை எப்படி நடத்துகிறார்கள் என முதன் முதலாக வெளியுலகிற்குச் சொன்னவர் நாடியா முராத். பாலியல் அடிமைகளுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ள நாடியா முராத்திற்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

‘பரியேறும் பெருமாள்’ -பரியனும் ஜோ வும் யார்? -சுபகுணராஜன்

கனமழை -7-ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*