அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்? #Nakeeran_Leaks

சபரிமலை தொடர்பான செய்திகள்

நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடர்பாக அவதூறு செய்திகளை வெளியிட்டமைக்காக நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அவரை சந்திக்க யாருக்கும் போலீஸ் அனுமதி மறுக்கும் நிலையில். தமிழக ஆளுநரின் நேரடி உத்தரவின் பேரில் நக்கீரன் கோபால் கைதாகி இருப்பதாக தகவல்கள் தெரிக்கின்றன.

அப்படி நக்கீரன் கோபால் மீது கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கு என்னதான் கோபம்? அப்படி என்ன எழுதிய நக்கீரன் என நக்கீரன் இதழை வாங்கிப் படித்தால் நமக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. “நான்குமுறை கவர்னரைச் சந்தித்தேன்.பகீர் வாக்குமுலம் தந்த நிர்மலா தேவிக்கு ஆபத்து” ! என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த கட்டுரையின் உள்ளடகம் இதுதான்.

கல்லூரி மாணவிகளை பல்கலைக்கழக உயரதிகாரிகளுக்கு இரையாக்க புரோக்கர் வேலை பார்த்து கைதான கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ஜாமீன் கிடைக்காமல் சிறையிலேயே இருந்து வருகிறார். ஒரு முறை “தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. தன்னை கொலை செய்ய சிலர் விரும்புகிறார்கள்” என நிம்மி தெரிவித்திருந்தார். ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையிலேயே இறந்தது போல நிர்மலா தேவியின் கதையும் சிறைக்குள்ளேயே முடிக்கப்படலாம் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏன் நிர்மலாவின் கதையை சிறைக்குள்ளேயே முடிக்க வேண்டும்? செக்ஸ் டாக்டர் பிரகாஷ் கைது செய்யப்பட்டு வழக்கு முடியும் வரை அவருக்கு ஜாமீனே கிடைக்காமல் வழக்கை அப்படியே முடித்தார்கள். அது போலவே நிர்மலா தேவிக்கும் ஜாமீன் கிடைக்காமல் செய்து வழக்கை மூன்றே மூன்று பேருடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அழுத்தம் காவல்துறைக்கு உள்ளதாம். இந்த வழக்கில் கைதாகி உள்ள நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் இந்த மூவரோடும்தான் இந்த வழக்கு முடிய வேண்டும் என சக்தி மிக்கவர்கள் நினைக்கிறார்கள்.

இந்த வழக்கில் பிரதான புள்ளிகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மனித வள மேம்பாட்டுத்துறை அதிகாரி கலைச்செல்வன் , மற்றும் துணைவேந்தர் செல்லதுரை, பதிவாளர் சின்னதுரை கவர்னரின் செயலாளர் ராஜகோபால் என பிரதானமாக இந்த நால்வரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர்கள். இவர்களுக்கும் நிர்மலா தேவிக்கும் நெருங்கிய அந்தரங்க தொடர்பு இருந்திருக்கிறது. இவர்கள் அனைவருமே நிர்மலா தேவியையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். மாணவிகளையும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இவர்களால் கவர்னர் வசிக்கும் ராஜ்பவனுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட நிர்மலா தேவி நான்கு முறை கவர்னரை சந்தித்திருக்கிறார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக விழாவுக்கு கவர்னர் வந்த போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையிலேயே நிம்மியும், கவர்னரும் சந்தித்து அந்நியோன்னியமாக பேசியிருக்கிறார்கள்.

மதுரை பல்கலைக்கழக அதிகாரி கலைச்செல்வன் அறிமுகம் நிம்மிக்கு கிடைத்த பின்னர்தான் நிம்மி மாணவிகளுக்கு வலை விரித்தார். இந்த கும்பலால் சுமார் 130 மாணவிகளுக்கு வலை விரிக்கப்பட்டுள்ளது. இதில் 60-பதுக்கும் மேற்பட்ட மாணவிகளை இந்த கும்பல் சீரழித்துள்ளது. இதில் கவர்னர் மாளிகைக்கும் தொடர்பு உள்ளது என்பதை கவர்னரின் செயலாளர் ராஜகோபாலுக்கு நிம்மியையும் பிடிக்குமாம் அவர் அழைத்து வரும் மாணவிகளையும் பிடிக்குமாம். முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனுக்கு நிம்மியை ரொம்பவே பிடிக்குமாம். தனது எல்லா தொடர்புகளையும் வாக்குமூலமாக போலீசிடம் சொல்லியிருக்கிறார் நிம்மி.

இந்த வாக்குமூலங்கள் வெளியில் கசிந்து விடாமல் பாதுகாக்கப்பட்டதோடு இந்த வாக்குமூலமே முறையாகப்பதியப்பட வில்லை என்கிறார் நிம்மி. ஒன்றிலோ நான் அமைதியாகி விட வேண்டும். அல்லது நான் கொல்லப்படுவேன். இதுதான் நிம்மியின் நிலை. நிர்மலாதேவியைப் பொருத்தவரை அவர் இதில் ஒரு அம்புதான். நான் மட்டும் குற்றவாளி போல சித்தரிக்கப்படுகிறேன் இன்று என்னை புரோக்கர் என்று எல்லோரும் அழைக்கிறார்கள் என்னை புரோக்கர் ஆக்கியவர்களை நான் அம்பலப்படுத்தாமல் விட மாட்டேன் என்பது நிம்மியின் மனக்கொதிப்பு.

ஆனால், வெளியில் சொன்னால் சிறைக்குள்ளேயே தீர்த்துக்கட்டுவது அதிகாரமிக்கவர்களின் முடிவு இதுதான் நக்கீரனின் அந்தக் கட்டுரை!

#NakkeeranGopal #shamelessmodi #MyCMisAThief #MyGovernorisaPervert
#NakkeeranGopal #MKStalin #arrest #BanwarilalPurohit #nakkeeran #DMK DMK – Dravida Munnetra Kazhagam M. K. Stalin #NakkeeranGopal #pervertgovernor #banwarilalpurohit #tnpolice #tnpoliceatrocities #tngovernment #puppetgovernment #shamelesstn #modiatrocities #fascistmodi #shamelessmodi

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*