இந்தியா மீது பொருளாதாரத்தடை: என்ன செய்யப்போகிறார் மோடி?

“காங்கிரசும் எங்களை அழிக்கப்பார்க்கிறது” -மாயாவதி

எமர்ஜென்சி சூழல்: ஸ்டாலின் கண்டனம்

அனைத்து வழக்குகளிலும் ஜாமின்: விடுதலையாவாரா திருமுருகன் காந்தி?

சபரிமலையில் பெண்கள் வழிபட தடை எப்போது வந்தது?

‘பரியேறும் பெருமாள்’ -இந்த உண்மைதான் தமிழ்ச் சமூகத்தின் முகமும்-கே. என். சிவராமன்

இந்தியா மீது பொருளாதாரத்தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளதால், ஆசிய நாடுகளில் அரசியல் பதட்டம் உருவாகி உள்ளது.
உலகின் எந்த நாடாக இருந்தாலும் அமெரிக்காவிடமே ஆயுதம் வாங்க வேண்டும். அமெரிக்காவிடமே பெட்ரோல், டீசல் வாங்க வேண்டும். அமெரிக்காவின் பொருளாதார நலன்களுக்காக சந்தையை திறந்து விட வேண்டும் இதுதான் அமெரிக்காவின் நிலைப்பாடு. இதை மீறும் நாடுகள் மீது பொருளாதாரத்தடை விதிக்கும். இதை அமெரிக்கா நீண்ட காலமாக செய்து வருகிறது.
ஏற்கனவே ஈரானிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்ததோடு, எண்ணெய் வாங்கக் கூடாது என்றும் சொன்னது. ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்க நவம்பர் வரை கெடு விதித்திருக்கும் நிலையில், ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் அளவைக் குறைத்த இந்தியா தங்களுக்கு விலக்கு அளிக்குமாறு அமெரிக்காவிடம் கோரி வந்தது. ஆனால் இந்தியாவுக்கு ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்க அமெரிக்கா விலக்கு அளிக்கவில்லை. இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து ஆயுதம் வாங்கும் இந்தியா மீது பொருளாதாரத்தடை விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதி நவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் இன்று டெல்லியில் பிரதமர் மோடிக்கும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கும் இடையில் கையெழுத்தாக இருக்கிறது. சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் நடைபெற இருக்கும் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா விரும்பவில்லை.
சிரிய படைகளுக்கும் ஐ.எஸ்.எஸ் திவீரவாதிகளுக்கும் இடையில் நடந்த யுத்தத்தில் சிரிய அரசுக்காக படைகளை அனுப்பிய ரஷ்யா அங்கு போர் விதிமீறல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியது. அப்போது, தனது நட்பு நாடுகளுடன் ரஷ்யாவிடம் இருந்து ஆயுதம் வாங்கக் கூடாது. அப்படி வாங்கினால் ஒப்பந்தப்படி பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா ஒப்பந்தம் செய்து கொண்டது. அமெரிக்காவின் நட்பு நாடான இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது.இதை பிரதமர் மோடி எப்படிக் கையாளப்போகிறார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.சீனா மீது அமெரிக்கா பொருளாதார தடை உள்ளிட்ட சீன பொருட்களுக்கு ஏராளமான வரிகளை விதித்த நிலையில், இந்தியா மீதும் பொருளாதாரத்தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டியுள்ளது.

#ரஷ்யாவிடம்_ஆயுதம்வாங்கும்_இந்தியா #அமெரிக்கா_இந்தியா #இந்தியாமீதுபொருளாதாரத்தடை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*