இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம் இது!

அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்!

பழனிசாமிக்கு மோடி போட இருக்கும் ஐந்து கட்டளைகள்?

வீரப்பனைக் காட்டிக் கொடுத்த பெண்ணின் இப்போதைய நிலை?

தமிழகத்தில் தினகரனை தவிர்த்து தேர்தல் கருத்துக்கணிப்பு சாத்தியமா?

மொபைல் போனின் வளர்ச்சி நம் அனைவரையுமே ஒரு புகைப்படக் கலைஞர்கள் ஆக்கி விட்டது. அன்றாடல் லட்சக்கணக்கான புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. நாம் ஒரு சிறந்த புகைப்படத்தை எடுக்கிறோம் என்பது கூட தெரியாமல் அன்றாடம் பல நூறு சிறந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டே வருகிறது. அப்படி ஒரு புகைப்படம்தான் இது.
ஸ்விகி உணவுகளை ஆர்டர் செய்யும் மத்திய தரவர்க்கத்தினருக்கு உணவு சப்ளை செய்யும் ஸ்விகி நிறுவனத்தின் சப்ளையர்கள் இவர்கள். ஸ்டார் ஹோட்டல் துவங்கி நம்மூர் சரவணா பவன் வரை சில் வண்டுகள் போல பைக்கில் பறந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவை டெலிவரி செய்வார்கள். டிராபிக் நெருக்கடி மிக்க சென்னை நகரத்தில் ஸ்விகி டெலிவரி பாய்ஸ் நம் கண்களில் அன்றாடம் தட்டுப்படுகிறார்கள். நாம் அவர்களை எப்போதேனும் ஒரு நேரம் கடந்து செல்கிறார்கள். நாமும் என்றேனும் ஒரு நாள் ஸ்விகியில் ஆர்டர் செய்து சாப்பிட எண்ணுகிறோம். ஆனால் உணவு சப்ளை செய்யும் அவர்கள் எங்கே உணவருந்துகிறார்கள் என்று எப்போதேனும் நாம் எண்ணியதுண்டா?

தெருவோரங்களில் இருக்கும் கையேந்தி பவன்களில்தான் அவர்களின் மூவேளை உணவும் கழிகிறது. ஒரு பெண் தோழி சொல்கிறார் உலகம் முழுக்க நிலமை இப்படித்தான் இருக்கிறது. நாங்கள் உணவுகளை தயாரித்து அனுப்புகிறோம். ஆனால் பசியென்று நாங்கள் வேலை செய்யும் உணவகத்தில் எதையும் உண்ண முடியாது” என்கிறார் அவர் ஸ்காண்டிநேவிய நாடொன்றில் சமையல் கலைஞராக பணி செய்கிறார்.

அந்த வகையில் இந்த படம் ஒரு வர்க்கத்தின் வாழ்வையும் துயரையும் சுமக்கிறது!

#swiggy #swiggy_delivery_Boys #swigg_delivery_job #ஸ்விகி_டெலிவரி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*