இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஜெயக்குமார்!

“இந்த ஆட்சிக்கு எதுவும் நேராது நாங்கள் பார்த்துக்கொள்வோம்” இதுதான் டெல்லியிலிருந்து அதிமுக அரசுக்கு பாஜக தலைமை ஊட்டியிருந்த நம்பிக்கை.  ஆனாலும், ஓபிஎஸ்- இபிஎஸ் இருவருக்குமே உள்ளுக்குள் பெரிய கலக்கம் இருந்தது. ஒபிஎஸை விட அதிகம் ஆடிப் போயிருந்தவர் இபிஎஸ்தான் சம்பந்தியோடு ஊழல் வழக்குகளில் சிக்கிவிடுவோமோ என்று கலக்கம் இருந்தாலும், இப்போதைக்குப் பிரச்சனை இல்லை , நாளை திமுக ஆட்சிக்கு வந்தால்தான் வருமானத்திற்கு அதிகமாக  சொத்துச் சேர்த்த  வழக்கில் நம்மை சேர்ப்பார்கள். இப்பொதைக்கு உயர்நீத்மன்றத்தில் இருக்கும் தகுதி நீக்க வழக்கில் எதுவும் சிக்கல் நேரக் கூடாது என்று சொல்லியபடியே  இருந்திருக்கிறார்.
தீர்ப்பு சாதகமாக  வந்தது. ஒபிஸ்-இபிஎஸ் என இருவரும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரோ வருவோர் போவோருக்கெல்லாம் இனிப்பூட்டிக் கொண்டிருந்தார்.அவரிடம் இனிப்பை வாங்கிவிட்டு அந்தப் போக்கம் ரத்தத்தின் ரத்தங்கள் பலர் காதுபடி அடித்து விட்டுப் போன கமெண்ட் காமெடியாக இருந்தது.
ஒரு வேளை தீர்ப்பு பாதகமாக வந்து ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டிருந்தால் முதல் பலியாடு ஜெயக்குமார்தான். ஆனால், நல்லகாலம் தப்பியிருக்கிறார். ஆனால், தீர்ப்புக்குப் பின்னர் மொத்த இணைய ஊடகங்களிலு மீம்ஸ்களின் நாயகனாக வலம் வந்தவர் ஜெயக்குமார்தான். எல்லாம் குழந்தை பிறந்த ராசி என பிரித்து மேய்ந்து விட்டார்கள்.
#sabarimla_song சபரிமலை அய்யப்பன் அசத்தல் சாங்!

தமிழகத்தில் இதுவரை இப்படி ஒரு கொலை நடந்ததில்லை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*