இராணுவ அமைச்சர் பிரான்ஸ் சென்றது ஏன்? -காங் கேள்வி!

#metoo போராளிகள் தடுமாறுகிறார்கள்-கார்ல் மார்க்ஸ் கணபதி

வைரமுத்துவை குறிவைக்கும் ஆண்டாள் அரசியல்!

#Metoo பழம்பெரும் நடிகைகள் ரெடி- பாலியல் புகாரை விசாரிக்க மூவர் குழு அமைப்பு- விஷால்!

‘ஜெ’ இட்லி சாப்பிட்டார் என்று பொய் சொன்னது அப்பல்லோ நிர்வாகம் -நீதிபதி !

பலமிழக்கும் காங் :சட்டீஸ்கர் தேர்தலில் பாஜக வெற்றி பெறும்?

ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழலில் பாஜக நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ஆனாலும் அதன் மீது விசாரணைகளோ நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கோ பாஜக அரசு உத்தரவிட மறுத்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா டெல்லியில் பேசுகையில்:-
“விமான உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் பணியை எச்.ஏ.எல் நிறுவனத்திற்கு வழங்காமல் தனியார் நிறுவனத்திற்கு ஏன் வழங்கினார்கள் என்பதை பிரதமர் மோடி மட்டுமே அறிவார். ஏனென்றால் இது அவருடைய தனிப்பட்ட முடிவு. அதனால், இதில் என்ன செய்யப் போகிரோம் என்பது அவர் மட்டுமே அறிந்த விஷயம். தனது அரசைப் பற்றி மிக உயர்வாகப் பேசிக் கொள்ளும் மோடி மட்டுமே இது பற்றி பேச வேண்டும்.ஆனால், இது பற்றி அவர் மவுனம் காக்கிறார்.அவருடைய மவுனம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஏனென்றால் இந்த விவகாரத்தில் பிரதமர்தான் முழுவதும் தொடர்புடையவர். தனிப்பட்ட முறையிலும் கூட இந்த ஊழலுக்கு அவரே பொருப்பானவர். மேலும் ராணுவ மந்திரி பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று டசால்ட் நிறுவன அதிகாரிகளைச் சந்தித்து பேசியது ஏன் என்று விளக்கம் அளிகக் வேண்டும்” என்று கூறியுள்ளார் ஆனந்த் சர்மா.

#nirmalasitharaman #RafaleScamGrandExpose #RafaleScam #ரஃபேல்-ஊழல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*