இராவணன் ஆவி உயிர்பலி எடுத்ததா?

ஸ்டாலின் மீது அவதூறு பரப்பும் பாஜக கே.டி.ராகவன்!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜோடா பதேக் என்ற பகுதியில் தசரா பண்டிகையின் பிரதான விழாவான இராவணன் கொடும்பாவி எரிப்பு நடந்தது. அதை வேடிக்கை பார்த்த மக்கள் மீது ரயில் மோதி 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து ஆண்டாண்டுகாலமாக ராவணனின் கொடும்பாவியை கொளுத்துவதால் கோபமடைந்த ராவணன் மக்களை பலி வாங்கி விட்டதாக வட இந்திய மாநிலங்களில் வதந்தி பரவி வருகிறது.இந்நிலையில், இந்த கோர விபத்தை அடுத்து பூரி சங்கராச்சியார் தோக்‌ஷனாந்த் தேவ் த்ர்த்த் மஹராஜ் “தசரா விழாவின் போது ராவணன் கொடும்பாவி கொளுத்தும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும்” என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் “ராவணன் கொடும்பாவி கொளுத்துவது  பழமைவாதம். அடிப்படையான இந்துக் கலாச்சாரத்திற்கு எதிரான இந்த பழக்கம் பஞ்சாபில் நிகழ்ந்தது போன்ற சோகங்களுக்கு வழிவகுக்கிறது.இந்து புராணங்களின் படியும், பழக்கவழக்கங்களின் படியும் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு ஒரு முறை மட்டுமே செய்யப்பட வேண்டும். அந்த வகையில் ராவணன் இறுதிச் சடங்கை ராமன் முன்னிலையில் வீபிடணன் செய்து முடித்து விட்டார். எனவே, தசரா விழாக்களின் போது இது போல கொடும்பாவிகளை கொழுத்தும் பழக்கம் ஒழிக்கப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பூரி சங்கராச்சாரியார் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், மக்களிடமோ ராவணனின் ஆவியே வந்து ரயில் ஓட்டுநரின் கண்ணைக் கட்டி கூட்டத்தினுள் பாய வைத்து விட்டது என்ற நம்பிக்கை வதந்தி போல பரவி வருகிறது.

#Abolishpractice  #Ravanaeffigy #PuriShankaracharya  #Ravana_vadha #இராவணன் #இராவண_வதம்

சபரிமலை பெண் வழிபாடு -கருத்துக்கணிப்பு!

அசையும் மாமலர்-மாலதி மைத்ரி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*