இலங்கை அரசியல் திருப்பம் -பிரதமரானார் ராஜபக்சே!

மேல்முறையீடும் தினகரன் எதிர்காலமும்?

சிறுமி கொலை -என்ன நடந்தது? எவிடன்ஸ் கதிர்

விசில் அடித்தவர்களை கடவுள் நம்பிக்கையில்லா கம்யூனிஸ்டுகள் என்ற இளையரஜா!

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராபக்சே மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
இலங்கை அதிபராக மைத்ரிபால சிறிசேனாவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவும் இருந்து வந்த நிலையில், இலங்கை பிரதமராக திடீரென ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கையில் அரசியல் குழப்பம்?
இலங்கை அரசியலில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. மைத்ரி பால சிறிசேனா வென்று ஜனாதிபதியாக அமர்ந்த பின்னர், ரணில் பிரதமராக பதவியேற்றார். இலங்கை அரசியலில் ஜனாதிபதிக்கே அதிக அதிகாரம் உள்ளது. என்னும் நிலையில், ரணிலுக்காக பிரதமர் பதவியையும் அதிகாரமிக்க பதவியாக சிறிசேனா மாற்றினார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தியாவின் உளவு அமைப்பான ரா தன்னை கொலை செய்ய சதி செய்கிறது என்று சிறிசேனா குற்றம் சுமத்தியதாக செய்திகள் வெளியானது. ஆனால், அதை மறுத்த சிறிசேனா `பிரதமர் மோடியிடம் பேசி “நான் இந்தியாவின் நண்பன்” என்று பேசியதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், ஆளும் அமைச்சரவைக்குள் ஏற்பட்ட குழப்பங்களுக்குப் பின்னர் ரணிலை நீக்கி விட்டு ராஜபக்சேவை பிரதமராக்க சிறிசேனா விரும்பியதாகக் கூறப்படுகிறது. இந்த குழப்பங்கள் துவங்கிய காலத்திலேயே ராஜபக்சே இந்தியாவுக்கும் பயணம் மேற்கொண்டார். ரணில் விக்கிரசிங்கே இந்தியாவுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தை வளர்த்தெடுப்பது உள்ளிட்ட வெவ்வேறு விஷயங்களில் சிறிசேனாவுக்கும், ரணிக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்த நிலையில், ராஜபக்சேவை திடீரென பிரதமரான பதவியேற்க வைத்திருக்கிறார் சிறிசேனா.

#Rajapakshe #Mahinda_Rajapaksa #Srilanka_Politics #Eelam #Tamil_Eelam

தகவல் திருட்டு -பேஸ்புக்கிற்கு 5 கோடி அபராதம்!

யாரிடமும் தோற்காது -பினராயி விஜயன்!

இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஜெயக்குமார்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*