எதிக்கட்சித் தலைவரை சந்திக்க தயங்கும் ஆளுநர்!

ஊடகச்சுதந்திரத்திற்காக நீதிமன்றத்தால் மூன்று முறை குட்டப்பட்ட அதிமுக அரசு!

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக தலைவர் ஸ்டாலினை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்க தயங்குகிறார் என்று செய்தி வெளியாகி உள்ளது. தன் ஒராண்டை நிறைவு செய்திருக்கும் ஆளுநர் ஏன் 89 உறுப்பினர்களைக் கொண்ட பிரதான சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரை சந்திக்க தயங்குகிறார் என்ற கேள்வி பிரதானமாக முன் வைக்கப்படுகிறது.
தமிழர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திமுக பல்வேறு புகார் மனுக்களை அளித்துள்ளது. ஊழலில் திளைக்கும் இந்த அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மிக முக்கியமான பல கோரிக்கைகள் அதில் உள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்திற்குப் பதிலாக வேறு எந்த ஒரு அமைப்பையும் உருவாக்கக் கூடாது காவிரி மேலாண்மை வாரியம்தான் உருவாக்க வேண்டும் என்று கவர்னரிடம் நேரடியாக மனுக்கொடுத்தார். ஆனால், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக வேறு அமைப்புதான் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், மாநில உரிமைகளில் தலையிடுகிறார் என்று சொல்லி கவர்னருக்கு திமுக கருப்புக் கொடி காட்டியது. அதாவது மாநிலத்தில் ஊழல் நடக்கிறது குட்கா அதிகாரிகள், அமைச்சர்கள் வீடுகளில் ரெய்ட் நடக்கிறது இவைகளை தட்டிக் கேளுங்கள் என்று திமுக கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்காத ஆளுநர் . சமீபத்தில் துணைவேந்தர் நியமனங்களில் ஊழல் நடக்கிறது என்றார்.

உடனே எதிர்க்கட்சித் தலைவர் “மேடைகளில் ஆளுநர் பேசி பயனில்லை உடனடியாக துணைவேந்தர் நியமனங்களில் நடந்த ஊழல்களுக்கு நடவடிக்கை தேவை” என்றார். துணைவேந்தர் நியமனங்களில் நடக்கும் ஊழல் தொடர்பாக கவர்னரை சந்திக்கக் கோரி நேரமும் கேட்டார்.

ஸ்டாலின் நேரம் கேட்ட உடனே கவர்னர் மாளிகையில் இருந்து அது தொடர்பாக விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. ஆளுநர் ஊழல் தொடர்பாக யார் மீதும் புகார் கொடுக்கவில்லை. கல்வியாளர்கள் பேசிக் கொண்டதையே மேடையில் தெரிவித்தார். மேலும் தான் பதவியேற்ற பின்னர் நியமிக்கப்பட்ட 9 துணைவேந்தர் நியமனங்களும் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையோடும் நடந்தது என்றும் குறிப்பிட்டார்.
தனது பதவிக்காலத்திற்கு முன்னால் நடந்த நியமனங்கள் என்றால் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிக்காலத்தில் நடந்த நியமனங்களைச் சொல்கிறாரா? அல்லது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவிக்காலத்தில் நடந்த நியமனங்களைச் சொல்கிறாரா என்ற கேள்வி எழுந்த நிலையில்தான் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக நக்கீரன் கோபால் மீது கவர்னர் மாளிகை புகார் அளித்து, அவரும் கைதாகி விடுதலையாகி விட்டார்.
தனது ஓராண்டு பணிகள் தொடர்பாக ஊழல், ஊழல் என்று வெறுமனே பேசிக் கொண்டே நடைபெறும் ஊழலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தொடர்பாக பல கேள்விகள் எழுப்பப்படும் நிலையில் இந்த நேரத்தில் ஸ்டாலினைச் சந்தித்தால் தர்மசங்கடமான சூழல் எழும் என்பதால் எதிர்க்கட்சித்தலைவரையே சந்திக்க தயங்குகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

#Banwarila_ Purohit #பன்வாரிலால்_புரோகித் #தமிழக_ஆளுநர்_ஓராண்டு_நிறைவு

நக்கீரன் கோபால் கைது – அவமானப்பட்டது ஆளுநரா அல்லது அட்மினா?

அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்? #Nakeeran_Leaks

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*