எதேச்சதிகாரம்,ஆணவத்தின் உச்சகட்டம்-ஸ்டாலின் காட்டம்

ஊடகச்சுதந்திரத்திற்காக நீதிமன்றத்தால் மூன்று முறை குட்டப்பட்ட அதிமுக அரசு!

தமிழ்நாட்டில், ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களைப் பதிக்கும் முக்கியமான திட்டங்களை நிறைவேற்றும் முன்பு பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்குமாறு, மத்திய பா.ஜ.க. அரசிடம், அ.தி.மு.க அரசு கோரிக்கை விடுத்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமத்தின் நிறுவனத்திற்கு, தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள “பேனா மை” ஈரம் காய்வதற்குள், அ.தி.மு.க அரசு விடுத்துள்ள இந்த திடீர் கோரிக்கை உள்நோக்கம் கொண்டது.

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு கருப்பண்ணன் இதற்காகவே டெல்லி சென்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தனைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியிருப்பது எதற்காக?

மக்களின் நலனுக்காகப் போராடும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளால் திட்டங்களை நிறைவேற்றுவது தாமதமாகிறது என்று அந்த கோரிக்கை மனுவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்துகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஏனென்றால் அரசியல் கட்சிகளோ, அரசு சாரா அமைப்புகளோ எந்த காலத்திலும் மாநிலத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கும், வளர்ச்சிக்கும் நிச்சயமாக எதிரானவை அல்ல.

அதனால்தான் மக்களின் விருப்பத்துடன் கூடிய ஒப்புதலுடன் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இதைக்கூட சரியான கோணத்தில் புரிந்து கொள்ளாத அ.தி.மு.க அரசு, தனது கையாலாகாத தனத்தை மறைப்பதற்காக, வேண்டுமென்றே அரசியல் கட்சிகள் மீது பழி போட்டு, இப்படியொரு கோரிக்கையை மத்திய அரசிடம் முன் வைத்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழிற்சாலைகளும் முதலீடுகளும் – தலைவிரித்தாடும் அ.தி.மு.க அரசின் ஊழல் மற்றும் கமிஷன் கலாச்சாரத்தால்தான், வேறு மாநிலங்களுக்குச் செல்கின்றனவே தவிர, மக்கள் நலனுக்காகவும் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் ஓயாமல் குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகளால் அல்ல! ஆனால், தங்கள் முதுகில் படிந்திருக்கும் “ஊழல் அழுக்கை” கிஞ்சிற்றும் நீக்க முடியாத அ.தி.மு.க அரசும், அதன் அமைச்சர்களும் மக்களுக்கு எதிரான திட்டங்களை, கருத்துக் கேட்காமலேயே செயல்படுத்துவோம் என்ற எதேச்சதிகார மனப்பான்மையில் செயல்படுவது, ஆணவத்தின் உச்சகட்டம்.

ஆகவே, மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையை அ.தி.மு.க அரசு உடனடியாகத் திரும்பப் பெற்று, முக்கியத் திட்டங்களை நிறைவேற்றும் முன்பு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, ஜனநாயக ரீதியாக மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டங்களை நடத்த கண்டிப்பாக முன் வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்!

#Banwarila_ Purohit #பன்வாரிலால்_புரோகித் #தமிழக_ஆளுநர்_ஓராண்டு_நிறைவு

நக்கீரன் கோபால் கைது – அவமானப்பட்டது ஆளுநரா அல்லது அட்மினா?

அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்? #Nakeeran_Leaks

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*