ஏழை பெண்ணுக்கு சிகிச்சை மறுத்த அவலம்!

#சபரிமலை பெண்களுக்கு எதிராக பெண்கள் பேரணி!

தமிழகத்தில் தினகரனை தவிர்த்து தேர்தல் கருத்துக்கணிப்பு சாத்தியமா?

கிரிஜா வைத்தியநாதன் அ.தி.மு.க உறுப்பினரா? -ஸ்டாலின் கேள்வி!

திருவாரூர்-திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: தடுப்பவர்கள் யார்?

பரமக்குடி அரசு மருத்துவமனையில் குருவிக்கார பழங்குடி இனத்தை சேர்ந்த ஜோதி என்ற வயது 45 பெண் உடல் நிலை சரியில்லாத தனது மகனோடு இருந்துள்ளார். இன்று 06.10.18 காலை ஸ்கேன் எடுத்து விட்டு தாயும் மகனும் தாங்கள் இருக்கும் வார்டுக்கு வந்துள்ளனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த வேறொரு பெண்மணி ஸ்கேன் எடுக்கும் போது தனது தாழி செயினை கழட்டி வைத்ததாகவும் அது கீழே விழுந்து தொலைந்து விட்டதாகவும் காவல்துறைக்கு புகார் செய்ய, அங்கு வந்த காவல்துறை நபர்கள் மேற்படி ஜோதியை அழைத்து தனது பாணியில் விசாரணை நடத்துள்ளனர்.

அங்கு பணியிலிருந்த ஜான்ரீட்டா என்ற பெண் காவலர் அந்த அம்மாவை தகாத வார்த்தைகளால் பேசியதோடு அடித்து பூட்ஸ் காலால் அரசு மருத்துவ மனையில் வைத்தே மிதித்துள்ளார். (சிசிடிவி கேமரா உள்ளது ) பின்னர் விசாரணையில் அந்த பெண் குற்றமற்றவர் என தெரிந்ததும் அனுப்பி விட்டனர். அப்போதிலிருந்து வயிறு வலிப்பதாக சொல்லியிருக்கிறார், இரவு சுமார் 8மணிக்கு தீராத வலி ஏற்படவே108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை அரசு மருத்துவமனைக்கு அவரது கணவர் சோலை மகன் முத்துபாண்டி உறவினர் அழகுராஜா ஆகியோர் கொண்டு வந்துள்ளனர், அங்கு இருந்த பெண் காவலர் அதே ஜான்ரீட்டா பணியிலிருந்த மருத்துவ பணியாளர்களிடம் இவதான் காலைல திருடுன திருடி இவள சேக்காதீங்க அப்பறம் ஏதாது திருடு போச்சுனா நாங்க பொறுப்பில்லை என்று சொல்லியுள்ளார். உடனே அவர்கள் அட்மிட் செய்ய மறுத்து விட்டனர். வெளியே விரட்டியுள்ளனர், வெளியே படுக்க வைத்துவிட்டு எனக்கு (தி.இராஜா செயலாளர் சிபிஎம்) தகவல் சொன்னார்கள் , நான் சுமார் 9.40 யணிக்கு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ மணை மருத்துவர்,செவிலியர் களிடம் கேட்டபோது சேர்க்க முடியாது என திட்டவட்டமாக சொன்னார்கள் . பிறகு அங்க போங்க இங்க போயி கேளுங்க என அழக்கழிக்கின்றனர், அந்த பெண்மணி வலியால் துடித்துக்கொண்டுள்ளார், கற்பபையில் பிரச்சினை என ஸ்கேன் எடுத்த ரிப்போட் காண்பித்தாலும் சேர்க்க மறுத்தனர். காவல்துறை உளவுபிரிவு நண்பர்களுக்கு தகவல் சொல்லியும் 12 மணிவரை அட்மிட் செய்யவில்லை. தற்போது அவர்களோடு வந்திருப்பவர்களோடு சேர்ந்து தர்ணா செய்வோம் என சென்றதும் அட்மிட் செய்வதற்கான பணியை துவக்கியுள்ளனர்.

இவ்வளவு கொடுமையா… அடடா… திருடனாகவே இருந்தாலும் கூட உடல்நிலை பாதிக்கப்பட்டால் சிகிச்சை செய்வது தானே அரசு மருத்துவமனையின் வேலை, காவலரோடு கூட்டு சேர்ந்து கொண்டு உயிர் காக்கும் உயர்தர பணியை செய்ய மறுக்கும் அரசு மருத்துவமனை பணியாளர்கள் மீதும், சந்தேகத்தின் பேரால் அழைத்து வந்து அடித்து பூட்ஸ் காலால் உதைத்ததோடு வலியால் துடித்தவருக்கு மருத்துவ உதவி செய்ய விடாமல் தடுத்த பெண்காவலர் ஜான் ரீட்டா மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த புகைப்படங்களை பாருங்கள்..இதை பகிருங்கள்.

தகவல் : கலாபன் அருத்தி

கனமழை பீதியைக் கிளப்பி இடைத்தேர்தலில் இருந்து எஸ்கேப் ஆன அதிமுக!

எதைக்கோரி நிற்கிறது ‘பரியேறும் பெருமாள்’ – அனிதா என் ஜெயராம்!

தனித்து போட்டியிடப்போவதாக அகிலேஷ் யாதவ் அறிவிப்பு: காங்கிரசுக்கு சிக்கல்!

திருவாரூர்-திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: தடுப்பவர்கள் யார்?

’குரங்கு சேட்டை’ டிரைவர் சஸ்பெண்ட்!

”பன்னீர் எங்களை முட்டாளாக்கி விட்டார்” -அதிமுக எம்.பி!

வரலாறு பன்னீரை விடுதலை செய்யுமா?-மருதம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*