“ஒரு வருடமாக நிர்மலா வரவில்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

விளம்பரத்திற்காக பொய் சொல்கிறார் சின்மயி?- சுவிஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்!

ஆளுநர் மாளிகை -நிர்மலாதேவி விவகாரம் முழு தொகுப்பு

#Metoo மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாய் கைது!

#metoo தமிழகப் பார்ப்பனர்களுக்கு கை கொடுத்திருக்கிறது- ராஜ் தேவ்

மாணவிகளிடம் பேரம் பேசிய விவகாரத்தில் சிக்கிய நிர்மலாதேவிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்த பேசிய ஆடியோ வெளியாகி அவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகங்கள் பொது வெளியில் உருவான நிலையில், காவல்துறையில் நிர்மலா தேவி அளித்துள்ள வாக்குமூலத்திலும் ஆளுநரை எனக்குத் தெரியும் என்றும் மேலும் சிலருடைய பெயரையும் கூறியிருப்பதாக நக்கீரன் இதழ் கடந்த ஏப்ரல் மாதம் செய்தி வெளியிட்டது.


இந்த செய்திக்காக தேசத்துரோக வழக்கில் ஆளுநர் மாளிகை புகாரில் கைது செய்யப்பட்டு விடுதலை ஆனார் நக்கீரன் கோபால். அவரது கைது நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை மீதும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீதும் மேலும் சந்தேகங்களை வலுவாக்கி சமூக வலைத்தளங்கள் முழுக்க வைரலான நிலையில், நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக மூன்று பக்க விளக்கத்தை ஆளுநர் மாளிகை அளித்துள்ளது.
அந்த விவகாரத்தில் நிர்மலா தேவி விவகாரத்திற்கும் ஆளுநர் மாளிகைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தமிழக ஆளுநரை தொடர்பு படுத்தி வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்புபடுத்துவது உண்மைக்கு புறம்பானது. இந்த செய்தி வெளியான 6 மாதம் நாங்கள் பொறுமை காத்தோம். அதன் பின்னர்தான் புகார் கொடுத்தோம். கடந்த ஓராண்டாக நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததில்லை. போலீசிடம் கொடுத்துள்ள நிர்மலாவின் வாக்குமூலத்தோடு ஒப்பிடாமல் பொறுப்பில்லாமலும், கோழைத்தனமாகவும் செய்தி வெளியிட்டுள்ளார்”என்று மூன்று பக்கங்களில் அளித்துள்ள விளக்கத்தில் தெரிவித்துள்ளது ஆளுநர் மாளிகை.

#NakkeeranGopal 
#NakkeeranGopal 

அதிக விலையில் அதானியிடமிருந்து நிலக்கரி-ஸ்டலின் கண்டனம்!

பயம் காரணமாக ‘ஜெ’ விமானத்தை பயன்படுத்தாத பழனிசாமி; விற்பனை செய்ய முடிவு!

#metoo : பிராமணர் சங்க தலைவர் நாராயணன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

#Rafale_scam ரிலையன்ஸ்சுக்காக பிரான்ஸ் அரசை நிர்பந்தித்த மோடி அரசு!

கர்நாடக சங்கீத உலகில் #metoo -லலித்ராம்

இயேசுவின் உடல் களவாடப்பட்டதா? #Risen -ராஜ்தேவ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*