கச்சா எண்ணெய் :மோடியின் கோரிக்கையை நிராகரித்த நாடுகள்!

கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்!

தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி!

#Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்!

நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்!

கச்சா எண்ணெய் விலை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்க எண்ணெய் விலையை குறைக்க இந்திய பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையை சவுதி உள்ளிட்ட எண்ணெய் வள நாடுகள் நிராகரித்திருக்கிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.பெட்ரோல், டீசல் விலையும் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து செல்கிறது.டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் மிக மோசமாக வீழ்ச்சி கண்டுள்ளது.
வளர்ச்சியின் பெயரால் பெரும்பான்மை பெற்ற மோடியின் ஆட்சியில் நடந்துள்ள இந்த வீழ்ச்சிகள் இந்திய பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்துக் கொண்டிருக்கும் நிலையில்,எண்ணெய் இறக்குமதி செய்யும் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் “எண்ணெய் இறக்குமதிக்கு டாலரை மட்டுமே பயன்படுத்த முடியுமா அதற்கு பதிலாக ருபாயில் எண்ணெய் பரிவர்த்தனை செய்ய முடியுமா? இந்தியாவில் எண்ணெய் எடுக்க ஏன் முதலீடுகள் வரவில்லை. நிறுவனங்கள் வரவில்லை என்பதையும் ஆராய வேண்டும்.
இந்த கூட்டத்தில் சவுதி அரேபியாவின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் அல் ஃபாலியும் கலந்து கொண்டார். இக்கூட்டத்தின் பின்னர் பேசிய அவர் “எண்ணெய் சப்ளை மட்டுமே எங்களிடம் உள்ளது. அந்த விஷயத்தில் நாங்கள் இந்தியாவுக்கு உதவுவோம். ஆனால், எண்ணெய்க்கு விலை நிர்ணயிக்கும் உரிமை எங்களிடம் இல்லை. இதில் உதவ முடியாது”என்றார்.
இந்திய எண்ணெய் தேவையில் 80% -ம் இறக்கு மதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இறக்குமதிக்குத்தான் இந்தியா அதிக தொகையை டாலரில் செலவிட்டு வருகிறது.

#Oil_Politics #எண்ணெய்_அரசியல் #பாஜக

கல்லூரிகளை தனது அரசியல் மேடையாக்கும் கமல்!

நாளை நடை திறப்பு கலவரச்சூழல்!

எனது கற்பை சூரையாடிவிட்டார் லீனா மணிமேகலை -சுசி கணேசன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*